20 கிலோ வரை எடையை குறைத்து சிக்குன்னு ஸ்லிம்மான சீரியல் நடிகை கிருத்திகா… இதுதானா அந்த ரகசியம்?…

By Begam on ஆவணி 17, 2023

Spread the love

நடிகை கிருத்திகா, “மெட்டி ஒலி” மூலம் தனது தனது நடிப்பை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் இவருக்கு வெற்றி வாய்ப்பு தேடி  வந்தது. பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக தற்பொழுது வலம் வந்து கொண்டுள்ளார்.

   

இதைத்தொடர்ந்து முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை கிருத்திகா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பான  ‘சின்னதம்பி’ சீரியலில் வில்லியாக நடித்து அசத்தினார். தொடர்ந்து நிறைய தொடர்கள் நடித்துவந்த இவர் இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார்.

   

 

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், தற்பொழுது ஒரு புறம் குடும்பம் இவர் தற்பொழுது ஒரு புறம் குடும்பம் மற்றும் குழந்தைகள், மறுபுறம் சினிமா என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.  பார்க்க இப்போது ஒல்லியாக காணப்படும் கிருத்திகா 20 கிலோ வரை கடுமையான டயட் இருந்து உடல் எடையை குறைத்துள்ளாராம்.

யோகா, தினமும் காலை எழுந்தவுடன் 45 நிமிடம் பயிற்சி செய்வாராம். அதில் சூரிய நமஸ்காரம் மிக மிக முக்கியமாம். அதன்பின் ஜிம் செல்வாராம், வாரத்தில் 3 நாட்கள் கட்டாயம் ஜிம் சென்று வொர்க்கவுட் செய்வாராம். உடல் எடையை குறைக்க கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு அரிசி உணவை எடுத்து கொள்ளவே இல்லையாம். அதற்கு பதில் சப்பாத்தி மட்டும் சாப்பிடுவாராம். தினமும் சிக்கன் சாப்பிடுவாராம், அது புரோட்டீனுக்கு உதவியதாம்.

சில நாட்களில் சிக்கன் பதில் பன்னீர் சாப்பிடுவாராம். தொப்பை குறைய தினமும் இரவு 7 மணிக்குள் டின்னர் சாப்பிடுவாராம். வெயிட் லாஸ் செய்ய கிருத்திகா குடித்த ஆரோக்கிய பானம் நெல்லிக்காய், வேப்ப கொழுந்து சேர்த்து அரைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிப்பாராம். தற்பொழுது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.