“ஐயோ… பையைத் திறங்க…” ஷாக்கான சி.ஐ.எஸ்.எஃப்… உள்ளே இருந்தது என்ன தெரியுமா?… டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு…!!

By Swetha on ஆவணி 13, 2026

Spread the love

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், டெல்லியில் இருந்து ஐதராபாத்திற்கு விமானத்தில் செல்ல வந்த பயணி ஒருவரின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் வழக்கம்போல் பரிசோதித்தனர். அப்போது, அந்தப் பயணியின் கைப்பையில் சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தச் சந்தேகத்திற்குரிய பொருள் வெளியே எடுத்துப் பார்க்கப்பட்டது. அப்போது அது ஒரு மண்டை ஓடு என்பது தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அது ஒரு குரங்கின் மண்டை ஓடு என்று அந்தப் பயணி தெரிவித்துள்ளார்.

   

இதையடுத்து, அந்தப் பயணி மேலதிக விசாரணைக்காக உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். கைப்பற்றப்பட்ட குரங்கின் மண்டை ஓடு முறையான பரிசோதனைக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு தொடர்பான வழக்கு என்பதால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.