Connect with us

இதுவரை இல்லாத Sk-வை திரையில் காட்டப் போகும் AR முருகதாஸ்.. அதுக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்யும் விஷயம்..

CINEMA

இதுவரை இல்லாத Sk-வை திரையில் காட்டப் போகும் AR முருகதாஸ்.. அதுக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்யும் விஷயம்..

 

சிவகார்த்திகேயன் அமரன் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தை ராஜ் கமல் ஃபிலிம் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பல நடிகர்கள் நடித்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் தயாராகி வருகிறதாம், இப்படத்திற்கு இசை ஜீனியஸ் ஜிவி பிரகாஷ் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க ராணுவத்தை மையமாகக் கொண்டு மறைந்த மேஜர் முகுந்தன் அவர்களின் வாழ்க்கை சரிதத்தை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது.

இப்படம் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியாகும் தேதியை ராஜ்கமல் நிறுவனம் தெரிவிப்போம் என்று அறிவித்திருந்தார்கள். சிவகார்த்திகேயன் அமரன் படத்தை முடித்துவிட்டு, ஏ.ஆர் முருகதாஸ் அவர்களுடன் கூட்டணி இணைந்து தற்போது படம் நடித்து வருகிறார், அப்படத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் வித்தியாசமான முறையில் தன்னை உருவாக்கி வருகிறாராம், ஏ.ஆர் முருகதாஸ் என்றாலே தமிழ் சினிமாவில் மிக வித்தியாசமான கதைகள் இயக்குவதில் கை தேர்ந்தவர், அதனால் அவர் படங்களில் ஹீரோவை மிகப் புதுமையாக காமிப்பதே அவர் வழக்கம்,

   

முருகதாஸ் அவர்களின் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு ஹீரோவும் ரசிகர்கள் மத்தியில் மிக பிரஷ்ஷாகவும் வித்தியாசமான முறையில் தெரிவார்கள். அதை போல் இப்படத்திலும் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நடிப்பின் வித்தியாசத்தை காட்டுவதற்காக இதுவரை நடித்த சிவகார்த்திகேயன் உடல் மொழியைத் தாண்டி இப்படத்தில் வேறு மாதிரி தெரிவதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறதாம்.

இதற்காகவே தன்னுடன் ஆக்டிங் கோச் ஒருவரை வைத்துக்கொண்டு படத்தில் ஒவ்வொரு இடத்திலும் தன் நடிப்பை எவ்வளவு வித்தியாசமாக காட்ட முடியுமோ அவ்வளவு சிறப்பாக காண்பித்து நடித்து வருகிறாராம். அதனால் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மிகப் புதுமையாகவும் வித்தியாசமான முறையில் நடித்து வருவதால், திரையில் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top