சிவகார்த்திகேயன் அவர்கள் இவ்வருடம் ரிலீஸ் ஆன அயர்லான் படம் வெறித்தனமாக ஓடியது. அப்படம் சர்ச்சைக்கு உள்ளானாலும் குடும்பங்கள் அளவில் பெரிய அளவும் கொண்டாடப்பட்டது. இருப்பினும் சிவகார்த்தி அவர்களுக்கு பெருமளவில் இயக்குனர்கள் வந்து குவிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் அடிப்படையில்சிவகார்த்திகேயன் நடித்து வரும் sk 21 படத்தின் டைட்டில் இம்மாதம் வெளியாகவுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டும் சிவாவின் பிறந்தநாளில் வெளியாகிறது. இதற்கு அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள சிவகார்த்திகேயன், விரைவில் வெங்கட் பிரபு கூட்டணியிலும் இனிய உள்ளார்.
கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக மாஸ் நடிகராக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். சின்ன திரையில் இருந்து சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் 15 ஆண்டுகளில் 20 படங்களில் நடித்துவிட்டார். இந்தாண்டு பொங்கலுக்கு அவரது நடிப்பில் வெளியான அயலான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படம் 5 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சிவகர்த்திகேயனுடன் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. மாநாடு படம் வெளியானதில் இருந்தே ஏற்கனவே சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணி குறித்து அடிக்கடி தகவல்கள் வெளியாகினது. இதனால் 2023-ல் இக்கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்யின் தளபதி 68 இயக்குநராக கமிட்டானார் வெங்கட் பிரபு.
அதன்படி விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் GOAT திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனை முடித்துவிட்டு கன்னட ஹீரோ கிச்சா சுதீப்பின் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து இன்னும் அபிஸியலாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், வெங்கட் பிரபுவுக்காக சிவகார்த்திகேயன் ஏற்கனவே கால்ஷீட் கொடுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து A.R. முருகதாஸ் கூட்டணியில் இணைகிறார். இது சிவகார்த்திகேயனின் 23வது படமாக உருவாகிறது. அதன்பின்னர் தனது 24வது படத்திற்காக பிரபல இயக்குநர் ஒருவருடன் இணையவுள்ளாராம். இந்த இரண்டு படங்களும் முடிந்ததும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.
கோட் வெளியான பின்னர் எஸ்கே 25 படத்துக்காக ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை தொடங்கும் வெங்கட் பிரபு, 2026 ஆரம்பத்தில் தொடங்க முடிவு செய்துள்ளாராம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ஏஜிஎஸ் நிறுவனம் தான் இந்த ப்ராஜெக்ட்டை தயாரிக்கவிருந்ததாம். ஆனால் கோட் படத்தை தயாரித்து வருவதால் SK 25-ல் இருந்து AGS விலகிக் கொண்டதாகவும், அதற்குப் பதிலாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு மட்டுமே சிவகார்த்திகேயன், A.R முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் அவர்களின் கூட்டணியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.