தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு பஞ்சமா.? தன் கதைக்கு ஹீரோயின் கிடைக்காமல் திக்கு முக்காடும் Sj சூர்யா..

By Ranjith Kumar

Published on:

“எஸ்.ஜே சூர்யா” தமிழ் திரையுலைகள் இயக்குனராக அறிமுகமாகி பல படங்களை இயக்கி இயக்குனராக வலம் வந்து தற்போது, நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார், முக்கியமாக பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி தன் நடிப்பால் மக்கள் அனைவரையும் கட்டிப்போட்டு தனக்கென்று ஒரு மாபெரும் இடத்தை ஆணியடித்து பிடித்து வைத்திருக்கிறார் எஸ்.ஜே சூர்யா அவர்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் இயக்கிய படங்களில் தற்போது மிகப்பெரிய ஹீரோக்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய், அஜித் அவர்களின் நடித்த படமான குஷி, வாலி இவை அனைத்தும் எஸ் ஜே சூர்யா இயக்கியது. அதுமட்டுமல்லாமல் அதற்குப் பின்வாரு இவரே இயக்கி நடித்த படங்கள் உள்ளது, அதில் நியூ, இசை, அன்பே ஆருயிரே, போன்ற படங்கள் இவை அடங்கும், ஆனால் தற்போது பல வருடமாக இவர் எந்த படத்தையும் இயக்காமல் பல பிரம்மாண்ட இயக்குனர்களுடன் இணைந்து பல விசித்திரமான யாராலும் செய்ய முடியாத அளவிற்கு கஷ்டமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பில் மட்டும் தன் கவனத்தை செலுத்தி வந்த நிலையில்,

   

தற்போது நீண்ட காலமாக ஒரு கதையை உருவாக்கி கொண்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது, அதனால் மீண்டும் இயக்குனராக திரையுளிகள் களமிறங்க உள்ளார் என்று குறிப்பிடத்தக்க ஒரு முக்கியமான விஷயமாகும். அப்படத்திற்கு “கில்லர்” என்று பெயர் வைக்க உள்ளதாக சில அரசல் புரசலான தகவல் வெளியாகி இருக்கிறது, இப்படத்தில் காரை மையமாக வைத்து கதைகளம் இருக்குமாம்,

அதற்காக வெளிநாட்டில் இருந்து பிரத்தேகமாக ஒரு காரை வாங்கி சில மாடுபிகேஷன் செய்து படத்தில் இறக்க உள்ளாராம். தற்போது படவேலை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் படத்தில் கதாநாயகிக்கும் முக்கிய பங்கு கொடுக்கும் அளவிற்கு கதையை உருவாக்கியுள்ளாராம். ஆனால் தமிழ் சினிமாவில் எந்த கதாநாயகியும் இல்லாமல் தற்போது தவித்து வருகிறார் எஸ் ஜே சூர்யா. படத்திற்கு மிகப் பிரபலமான கதாநாயகி அமைத்தால் சரி வராது என்று மிதமான மார்க்கெட் உள்ள கதாநாயகியை தேடி வருகிறாராம். ஆனால் இதுவரை எந்த கதாநாயகியும் அமையாமல் திக்குமுக்காடி வருகிறார் என்று தகவல் கசிந்துள்ளது. இப்படத்திற்கான பொருத்தமான ஹீரோயின் கிடைத்த பின் தான் இப்படம் துவக்கப்படும் என்று எஸ் ஜே சூர்யா தெரிவித்து இருக்கிறார்.

author avatar
Ranjith Kumar