நடிகர் எஸ்ஜே சூர்யா, இப்போது தமிழ் சினிமாவில் டாப் லெவலில் இருக்கிறார். அவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வேற லெவலில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இவருடன் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்சும் மிக வித்யாசமான ஒரு நடிப்பை தந்திருப்பதால், இந்த படம் தரமான இடத்தில் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளது. ஆனால், இன்று இப்படி பாராட்டை பெற்று வரும் நடிகர் எஸ்ஜே சூர்யா ஒரு காலகட்டத்தில் இரண்டு முறை போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்றால் நம்ப முடியவில்லைதான். ஆனால் உண்மையில் அதுதான் நடந்திருக்கிறது.

இயக்குநர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அவரும் நடிகை சிம்ரனும் நடித்த படம்தான் நியூ. ஏஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அருமையாக இருந்தன. இந்த படம் 2004ம் ஆண்டில் வெளிவந்து வெற்றிப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால், இந்த படத்துக்கான சென்சார் சான்றிதழ் செல்லாது என 2005ல் மெட்ராஸ் ஐகோர்ட் உத்தரவிட்டது. கும்பகோணம் சந்தையில என்ற பாடலை வைக்க கூடாது என்ற சென்சார் டைம்ல சொன்ன ஒரு பெண்மணி மீது, மொபைல் போனை தூக்கி வீசியதற்காக எஸ்ஜே சூர்யா கைது செய்யப்பட்டார். அந்த பெண்மணி இப்போது கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்தான். வக்கீலான அவர், அப்போது சென்சார்போர்டில் அதிகாரியாக இருந்துள்ளார். அவர் புகார் அளித்ததால் எஸ்ஜே சூர்யா கைது செய்யப்பட்டு, ரிலீஸ் செய்யப்படுகிறார்.

மீண்டும் 2006ம் ஆண்டில் எஸ்ஜே சூர்யா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தமுறை, நியூ படத்தில் சென்சார் செய்யப்பட்ட சில காட்சிகளை அவர் Promotion-காக பயன்படுத்தினார் என்ற புகாரில் கைதாகி, பின் ரிலீஸ் செய்யப்பட்டார். இப்படி நியூ படத்துக்காக 2 முறை எஸ்ஜே சூர்யா கைது செய்யப்பட்டவர். ஆனால், இப்போது நியூ படத்தை டிவி சேனல், ஓடிடி என எங்கேயும் பார்க்க முடியாது. எந்த தளத்திலும் அந்த படம் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. அன்று எஸ்ஜே சூர்யா போனை தூக்கி எறிந்தது வானதி சீனிவாசன் மீது என்பது ஆச்சரியமளிக்கிறது. அவர் இப்போது தேசிய பாஜக மகளிரணி தலைவராக, கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதிமய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசனை தோல்வியடைய செய்த வானதி சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

