தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, காக்க காக்க, மன்மதன், சில்லுனு ஒரு காதல், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோதிகா நடித்துள்ளார். பிரபல நடிகரான சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை ஜோதிகா கவனித்துக் கொண்டார்.

மும்பையைச் சேர்ந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு தமிழ்நாட்டு மருமகளாகவே மாறிவிட்டார் என ரசிகர்கள் பெருமிதத்துடன் இருந்தனர் ஆனால் சூர்யா, ஜோதிகா தம்பதியினர் குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிய பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மாதவனுடன் சேர்ந்து ஜோதிகா ஷைத்தான் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதன் பிறகு ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்துள்ளார்.

Suriya and jyothika
கடந்த மாதம் இந்த படம் ரிலீஸ் ஆனது. அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதேபோல சூர்யாவும் பாலிவுட் இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு ஜோதிகா அணிந்து வந்த உடை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்த வரைக்கும் குடும்ப பெண்ணாக இருந்த ஜோதிகா மும்பைக்கு சென்றவுடன் இப்படி மாறிட்டாரே என நெட்டிசன்கள் வெளுத்து வாங்குகின்றனர்.

அதிலும் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவுடன் Redefining myself என பதிவிட்டுள்ளார். அதாவது தன்னை மறு சீரமைப்பு செய்து கொண்டிருப்பதாக ஜோதிகா கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிவக்குமார் குடும்பத்தினருக்கு அந்த பதிவையும், கிண்டலான மீம்சையும் அனுப்பி கலாய்த்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் சூர்யாவின் பார்வைக்கும் சென்றது. இதனால் சிவக்குமார் ஃபேமிலியே என்ன செய்வது என்று தெரியாமல் அப்செட்டில் இருக்கிறார்களாம்.
View this post on Instagram
