Connect with us

“பெண்கள் ஜாக்கெட் அணிவது ஒரு குத்தமா… அப்படி ஒரு கிராமம்…”- சிவகுமாரின் 100 ஆவது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ யின் அதிரிபுதிர் ஹிட்!

CINEMA

“பெண்கள் ஜாக்கெட் அணிவது ஒரு குத்தமா… அப்படி ஒரு கிராமம்…”- சிவகுமாரின் 100 ஆவது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ யின் அதிரிபுதிர் ஹிட்!

 

தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என அனைவராலும் அழைக்கப்பட்டு இன்றளவும் நினைவுகூறப்படும் ஒரு நடிகராஜ சிவகுமார் இருக்கிறார். 60 களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அறிமுகமான சிவகுமார் அதன் பின்னர் கதாநாயகன் ஆனார். 70 களிலும் 80 களிலும் குறிப்பிடத்தகுந்த படங்களைக் கொடுத்து 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

2000 களுக்குப் பிறகு அவரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி நடிக்க வந்த பின்னர் அவர் நடிப்பில் இருந்து விலகினார். பெரும்பாலான நடிகர்களின் 100 ஆவது படம் பெரிய வெற்றிப் படமாக அமையாது. ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு என பலரும் இதில் அடக்கம். ஆனால் சிவகுமாரின் 100 ஆவது படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

   

அன்னக்கிளி படம் மூலமாக கவனம் பெற்ற இயக்குனர்கள் தேவராஜ் மோகன் ஆகியோர் இயக்கத்தில் சிவகுமார் நடித்த திரைப்படம்தான் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’.  இந்த படத்தின் கதைக்களமே ஒரு வித்தியாசமான கிராமத்தை மையப்படுத்தியது.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தே தெரியாத மலை கிராமத்தில் சிவகுமார் பிறந்து வளர்கிறார். அந்த கிராமத்தில் பெண்கள் யாருமே ஜாக்கெட் அணியக் கூடாது என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது. சிவகுமாரின் உறவுக்கார பெண் ஒருவரை மணமுடிக்க, அவர் நகர்ப்புறத்தில் இருந்ததால் இந்த கிராமத்தின் கட்டுப்பாடுகளோடு பொருந்த முடியாமல் தவிக்கிறார்.

இதனால் சிவகுமார் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. மனைவிக்கு இன்னொருவரோடு தொடர்பு இருப்பது தெரிந்தது சிவகுமார் என்ன முடிவு எடுக்கிறார் என்பதே இந்த படத்தின் கதை. இதை ரத்தமும் சதையுமான ஒரு கிராமத்துப் படமாக இயக்குனர்கள் தேவராஜ் மோகன் ஆகியோர் உருவாக்கி இருப்பார்கள். இளையராஜாவின் இசையும், சிவகுமாரின் வெள்ளந்தியான நடிப்பும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்க, இந்த படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.

பாரதிராஜாவுக்கு முன்பே தமிழ் சினிமாவுக்கு ஒரு நிஜமான கிராமத்தைக் காட்டிய இயக்குனர்களாக தேவராஜ் மோகன் ஆகியோர் முன்னோடியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
To Top