தமிழ் திரை உலகில் ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் கால் பதித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய ரசிகர்கள் ‘தலைவர்’ என்றும், ‘சூப்பர் ஸ்டார்’ என்றும் அன்புடன் அழைக்கின்றனர். திரைக்கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகராக மட்டுமின்றி, ஆன்மீகவாதியாகவும் உள்ளார்.
இவர் எண்ணற்ற விருதுகளை வாங்கி உள்ளார். இவர் நடித்த ‘மூன்று முடிச்சு’ படம் சிறந்த நடிகராக இவரை அடையாளம் காட்டியது .வேலைக்காரன், மனிதன் ,தர்மத்தின் தலைவன், அண்ணாமலை, பாட்ஷா ,படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தன. சிவாஜி, எந்திரன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இவருடைய திரைப்படங்களுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளது. இவர் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கின்ற படம் ‘ஜெய்லர் ‘.இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்து பட குழு முதல்கட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த ரவி போன்றோர் நடிக்க உள்ளனர். இயக்குனர் நெல்சனின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் ஜெய் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன .ஜெயிலர் படத்தில் ரஜினி குமாருக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததாகவும் ,அதற்கு பதில் நடிகர் ஜெய் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதைப் பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் படக்குழுவினரால் வெளியிடப்படவில்லை.இது வரை ரஜினியுடன் இணைந்து நடிக்காத ஜெய் இப்படத்தில் அவருடன் இணைந்து நடிப்பாரா ?என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். ‘ஜெய்லர்’ படத்தில் ‘ஜெய்’ நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…