தனுஷ், SK பட இயக்குனருடன் கைகோர்க்கும் “லெஜன்ட் சரவணன்”.. மரண அடிக்கு ரெடியான அண்ணாச்சி..

By Ranjith Kumar on மாசி 21, 2024

Spread the love

சரவணா செல்வரத்தினம் கடையின் ஓனரான “லெஜெண்ட் சரவணா” அவர்கள் கடந்த ஆண்டு சொந்த தயாரிப்பில் “லெஜெண்ட்” என்ற தலைப்பில் இவர் ஹீரோவாக நடித்த வெளிவந்த படம் பெரும் பேசும் பொருளாக தமிழ் சினிமா துறையில் மாறி இருந்தது, 50 வயது தொட்ட இவர் பல தொழில்களில் முன்னணியாக இருந்து வருகிறார், ஆனால் தற்போதைய இவரின் கவனம் சினிமாவில் திரும்பியுள்ளது, அதற்கு காரணம்,

இதற்கு முன்னால் இவர் நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்வதில் எந்த நடிகரையும் போடாமல் தானாக முன்வந்து அந்த நிறுவனத்தின் பொருட்களை புரமோஷன் செய்வதற்காக தன்னையே ஒரு பிராண்டாக மாற்றினார். அதை மக்கள் நிறைய பேர் ஏற்றுக் கொண்டார்கள், ரசிக்க ஆரம்பித்தார்கள், அதனாலயே இவர் தன் பார்வையை சினிமா பக்கம் திருப்பினார், தற்போது அதனால் உருவான படம் தான் “லெஜன்ட்”. இப்படம் நினைத்த அளவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் வாங்கவில்லை என்றாலும்,

   

இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமானார் “லெஜெண்ட் சரவணன்”, மக்கள் இவரை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டார்கள். அதன் பின் இவர் இரண்டாவது படம் எப்பொழுது பண்ணப் போகிறார் என்று பலரும் காத்துக் கொண்டிருந்தார்கள், தற்போது அந்த நிலையில் இவர் படத்திற்கான அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார், பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், தனுஷ் அவர்களை வைத்து இயக்கிய “துரை செந்தில்குமார்” இயக்குனர் அவர்கள் தற்போது லெஜெண்ட் சரவணன் அவர்களை வைத்து இயக்க உள்ளார்,

   

இவர் இதற்கு முன்னால் சிவகார்த்திகேயன் வைத்து எதிர்நீச்சல் படத்தையும், தனுஷ் அவர்களை வைத்து கொடி படத்தையும் இயக்கி சினிமா துறையில் ஒரு வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார், தற்போது இவர் “லெஜன்ட் சரவணன்” அவர்களுடன் இணைந்து லெஜன்ட் 2 படத்திற்கான கூடிய விரைவில் ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார், இதை கண்ட ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.