தமிழ் சினிமாவை பொருத்தவரையில் முன்னணி நடிகர்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை எடுக்க முடியாது என்ற நிலையில் தான் இயக்குனர் மற்றும் பட தயாரிப்பாளர்கள் தற்போது உள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தால் மட்டும் தான் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க முடியும் என்ற சூழலும் தற்போது உருவாகிவிட்டது. அதனால் தான் அவர்களை சூப்பர் ஹீரோக்களாக காட்ட வேண்டிய சூழல் உள்ளது. நடிகர் விஜய் 300 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்க தொடங்கிய நிலையில் தன்னுடைய சம்பளத்தை அப்படியே 100 கோடியாக உயர்த்தினார். தொடர்ந்து லியோ திரைப்படம் 100 கோடி வசூல் வேட்டை நடத்திய நிலையில் 200 கோடியாகவும் தற்போது தளபதி 69 படத்துக்கு 250 கோடியாகவும் தன்னுடைய சம்பளத்தை விஜய் உயர்த்தியுள்ளார்.

விஜய்யைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அஜித் இருவரும் 100 கோடிக்கும் அதிகமான சம்பளம் வாங்குகின்றனர். இறுதியாக ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூல் வேட்டை நடத்தி இருந்த நிலையில் ரஜினி 200 கோடி வரை கூலி திரைப்படத்திற்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அதனைப் போலவே அஜித் இறுதியாக நடித்த துணிவு திரைப்படம் 200 கோடி வசூல் செய்திருந்த நிலையில் விடாமுயற்சி படத்திற்கு 105 கோடி சம்பளம் பேசியுள்ளார்.

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு 175 கோடி வரை அவர் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம் மூலமாக 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் பார்த்துள்ள நிலையில் அவரும் அதிரடியாக தன்னுடைய சம்பளத்தை 100 கோடி கேட்பாரா என்ற விவாதங்கள் தற்போது எழுந்துள்ளது.

அமரன் திரைப்படத்தை தொடர்ந்து அவர் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களை கொடுத்தால் அவர் கேட்பதற்கு முன்பே தயாரிப்பாளர்களே சம்பளத்தை உயர்த்த தயாராகி விடுவார்கள். அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தை தற்போது 60 கோடி அளவுக்கு உயர்த்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் என்ற சாதனையை அமரன் படைத்துள்ளது.
