“அவர் வேற லெவல்.. நான் போட்டி போடவே இல்ல…” விஜய் ரசிகர்களின் விமர்சனத்திற்கு சிவகார்த்திகேயன் பதிலடி…!!

By Devi Ramu on மார்கழி 24, 2025

Spread the love

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆவதால் இணையத்தில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. விஜய்யின் அரசியல் வருகையினால் அவரது இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்கப் போகிறார் என்ற பேச்சுகள் நிலவி வரும் சூழலில், இந்த நேரடி மோதல் விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, சிவகார்த்திகேயன் வேண்டுமென்றே விஜய்க்குப் போட்டியாகக் களமிறங்குவதாகச் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசியுள்ள சிவகார்த்திகேயன், தனக்கு விஜய் சாருடன் மோதும் எண்ணம் துளியும் இல்லை என்றும், ஒரு பெரிய நடிகரான அவருடன் தன்னால் போட்டி போட முடியாது என்றும் பணிவுடன் தெரிவித்துள்ளார்.

   

ஒரு விடுமுறை நாளில் தங்களது படம் வெளியாக வேண்டும் என்பது எல்லா நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பொதுவான ஆசைதான் என்றும், அதுவே தற்போதைய ரிலீஸ் முடிவுக்குக் காரணம் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். திட்டமிட்ட மோதல் எதுவும் இல்லை என அவர் தெளிவாகக் கூறியுள்ள போதிலும், பொங்கல் ரேஸில் ஜெயிக்கப்போவது யார் என்பதைப் பார்க்கத் திரை உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.