actor Sivakarthikeyan

தனது படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம்… ரசிகர்களுக்காக இத்தனை கோடிகளை செலவு செய்கிறாரா சிவகார்த்திகேயன்? ஆனா இது பொது நலமா? சுயநலமா?

By Elango on பங்குனி 2, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த தாய்கிழவி படம் வெளியானது. இந்த படத்துக்காக ரசிகர்களுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு டிக்கெட்டுகளை வாங்கி தனது ரசிகர்களுக்கு வினியோகம் செய்துள்ளார்.

இதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் படம் வரும்போதெல்லாம் இப்படி செய்வது வழக்கம் என்கின்றனர். தனது படத்துக்கு பெரிய ஓபனிங் வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு யுக்தியை சிவகார்த்திகேயன் பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது. இதே போல் பராசக்தி படம் வௌியான போது ரூ. 4 கோடிக்கு இதே போல் ரசிகர்களுக்காக தனது செலவில் சிவகார்த்திகேயன் டிக்கெட்டுகள் வாங்கியிருக்கிறார்.

   

அதே போல் மதராஸி படம் வெளியான போதும் ஒரு பெரிய தொகைக்கு சிவகார்த்திகேயன் டிக்கெட்டுகளை வாங்கியதாக கூறப்படுகிறது. இப்படி அதிக தொகைக்கு ரசிகர்களுக்காக டிக்கெட்டுகளை சிவகார்த்திகேயன் வாங்குவது படத்துக்கு பெரிய ஓபனிங் என்ற பெயர் கிடைக்கும் என்பதால் இது பொதுநலமா, சுயநலமா என்ற கேள்வி எழுந்துள்ளது.