விடுதலை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான சூரி அதன் பிறகு நடித்த கருடன் திரைப்படம் கமர்சியல் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கொட்டுக் காளி திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கூழாங்கல் படத்தின் மூலம் கவனம் பெற்ற பி எஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இந்த படம் எடுக்கப்பட்ட அதற்கான முக்கிய காரணமே வினோத் ராஜ் என்பவர் மட்டும்தான்.
இந்த படத்தின் பட்ஜெட் எதுவுமே தெரியாது. அவர் கதை சொல்லியதும், எனக்கு முழு கதையும் சொல்லாதீங்க, அப்படி சொன்னா ஏதாவது மாற்றுங்கள் என்று நான் சொல்லுவேன், உங்களுக்கு என்ன எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை அப்படியே படமாக எடுங்க. பட்ஜெட் மட்டும் என்னிடம் கொடுங்க. நாம சேர்ந்து பண்றோம். இது ஒரு ஆரம்பம்தான். இந்த படத்தில் நான் என்ன முதலீடு செய்கிறேனோ, இது போக இந்த படம் வெற்றி பெற்று எனக்கு லாபம் வந்தால் அதில் முதலில் இருப்பதை எடுத்து உங்களின் அடுத்த படத்திற்கான அட்வான்ஸாக கொடுப்பேன்.
நீங்க அடுத்து என்ன படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை தாராளமாக எடுங்க. அதுபோக இன்னும் கொஞ்சம் லாபம் கிடைத்து விட்டால் வினோத் ராஜ் போல இன்னும் எங்கேயாவது யாராவது இயக்குனர்கள் இருந்தார்கள் என்றால் அதை தேடி கண்டுபிடித்து தர அருண் இருக்கிறார். அவர் கண்டுபிடித்துக் கொடுத்தால் இன்னும் பலருக்கு நான் உதவுவேன். எனக்கு இந்த வாழ்க்கையை கொடுத்த சினிமாவுக்கு தன்னால் முடிந்ததை செய்வேன் என்று சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று…
பிரேசில் நாட்டின் சாண்டா கதரீனா மாகாணத்தில் உள்ள பிரையா கிராண்டே பகுதியில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஹாட் ஏர் பலூன்…
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பிற கட்சி அமைச்சர்களை, திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஆ. ராசா…
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தாய்மாமன் தங்க மோதிரம்…