தமிழ் சினிமாவில் வழக்கமாக ஒரு இசையமைப்பாளரும் ஒரு பாடலாசிரியரும் இணைந்து வெற்றி பாடல்களை கொடுப்பதை தாண்டி அவர்கள் பணியாற்றும் படங்களும் வெற்றி அடைவதில் முக்கிய பங்காற்றுவர். சில நேரங்களில் இந்த கூட்டணியில் இயக்குனர்களும் நடிகர்களுமே இணைந்து செயல்படுவார்கள். அதன்படி இசையமைப்பாளர் இமான் மற்றும் பாடல் ஆசிரியர் யுகபாரதி ஆகியோரின் கூட்டணிக்கு தமிழ் சினிமாவில் முக்கிய இடம் உண்டு. சில படங்களில் ஓரிரு பாடல்களில் மட்டுமே கூட்டணி அமைத்திருந்தாலும் மொத்தமாக இவர்கள் இணைந்த படங்களின் பட்டியலும் நீண்டு கொண்டே போகும்.

அதன்படி மனம் கொத்தி பறவை, கும்கி, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தொடரி, கயல் மற்றும் சீம ராஜா என இவர்கள் கூட்டணியில் வந்த வெற்றி திரைப்படங்களும் பாடல்களும் ஏராளம். இந்தப் படங்களில் அனைத்து பாடல்களையும் யுக பாரதி தான் எழுதியிருப்பார். கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தை தயாரித்த மத ன் அதில் நடித்த விமல் மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து தனித்தனியாக இரண்டு திரைப்படங்களை தயாரித்தார்.

அதில் ஒன்று எழில் இயக்கத்தில் தேசிங்கு ராஜா, மற்றொன்று பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே இமான்தான் இசை அமைத்திருந்த நிலையில் யுகபாரதி பாடல்கள் பாடியிருந்தார். வழக்கமாக இவர்கள் உருவாக்கும் பாடல்களை இயக்குனர் எனில் எந்த விதமான மாற்றங்களும் சொல்லாமல் அப்படியே எடுத்துக் கொள்வாராம். ஆனால் அவர் முதல் முறையாக ஒரு பாட்டை நிராகரித்துள்ளார். அதாவது விமல் நடித்த தேசிங்கு ராஜா திரைப்படத்திற்காக இசையமைக்கப்பட்ட ஊதா கலரு ரிப்பன் பாடலை கேட்ட எழில் அந்தப் பாட்டை வேண்டாம் என்று நிராகரித்துள்ளார்.

அப்போது அதே கம்பெனிக்கு படம் இயக்கிக் கொண்டிருந்த பொன்ராமிற்கு இந்த பாடலை போட்டு காட்ட அவருக்கு பிடித்து போய் தன்னுடைய பயணத்தில் பயன்படுத்திக் கொண்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெற்றியின் ஆரம்ப புள்ளியாக இருந்தது இந்த பாடல் தான் என்று சொல்ல வேண்டும். இன்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் பாடல் பல இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது. இந்த தகவலை யுகபாரதி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
