விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு ரிலீசான மெரினா திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்தடுத்து மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே, ரஜினி முருகன், வேலைக்காரன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.
கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசான மாவீரன் அயலான் ஆகிய படங்கள் மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
ராணுவ கதைக்களத்தை மையமாகக் கொண்டு அமரன் திரைப்படம் உருவாகி உள்ளது. அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு கமிட் ஆனார். இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இதற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்நிலையில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் வித்யுத் ஜம்வால் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
அவர்தான் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் வில்லனாக நடிக்கிறார். வித்யுத் ஷூட்டிங்கில் இணைந்த வீடியோவை பட குழுவினர் வெளியிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க உள்ளார். விஜய் பட வில்லனை சிவகார்த்திகேயன் படத்திற்கு கமிட் செய்ததால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Bringing back the villain who terrorized one and all 🔥
Welcoming the menacing @VidyutJammwal on board for #SKxARM ❤️🔥
▶️ https://t.co/57n8gxjemAShoot in progress.@SriLakshmiMovie @ARMurugadoss @Siva_Kartikeyan @anirudhofficial @SudeepElamon @rukminitweets @KevinKumarrrr… pic.twitter.com/OWGQYfu03z
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) June 9, 2024