தளபதியை தொடர்ந்து அரசியலில் களம் இறங்குகிறாரா குட்டி தளபதி.. திடீரென தன் நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்த SK..

By Ranjith Kumar

Published on:

நீண்ட நாளாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ராஜ்கமல் ஃபிலிம் இல் நடிக்கும் சிவகார்த்திகேயன் SK 21 படத்தில் டைட்டில் அமரன் என்ற பெயரில் வெளியாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய்பல்லவி ஹீரோயின் மேலும் ராகுல் போஸ், லல்லு ,ஸ்ரீகுமார் இவர்களின் நடிப்பில் G.V பிரகாஷ் இசை அமைத்து ராஜ் கமல் ஃபிலிம் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

அதற்கு அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK 23 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத ஒரு கூட்டணி அமைந்திருப்பதால் ரசிகர் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. இது தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்படத்திற்காக முழுமூச்சாக இறங்கி தன் திறமையை வெளிக் கொண்டு வந்திருக்கிறாராம். படபிடிப்பு தளத்தில் இவரின் நடிப்பை கண்டு முருகதாஸ் அவர்களை வியந்து போனார்களாம்.

   

அதனால் இப்படம் திரைக்கு வரும் போது மாபெரும் தீப்பொறியை கிளப்பும் என்று தெரிகிறது. அமரன் படம் pre- production சென்று கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்து SK 23 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு பிசியான படங்களுக்கு நடுவில் தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களை சிவகார்த்திகேயன் அவர்கள் நேரில் சந்தித்துள்ளாராம். ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கி நல்ல விஷயங்களை பேசி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை இவர் விஜய் அவர்கள் அரசியல் களத்தில் இறங்கப் போவதை அறிவித்ததை தொடர்ந்து இவரும் அதற்கான முயற்சி தான் எடுக்கிறாரா என்று சந்தேகத்தை கிளப்புகிறது?

இதுவரையிலும் இவ்வளவு ரசிகர் கூட்டத்தைக் கூட்டி எந்த விஷயங்களை பற்றி பேசாமல் இருந்த சிவகார்த்திகேயன், தற்போது இப்படி நடந்து கொள்வது சற்றே சந்தேகத்திற்குரிய கேள்வியாக இருக்கிறது என்று பலரும் பேசி வருகிறார்கள். இதற்கான பதிலை இன்னும் சிவகார்த்திகேயன் தெரிவிக்கவில்லை. அவர் தெரிவித்தால்தான் இது அரசியல் குறியீடு ஏதும் உள்ளதா? அல்லது தன் ரசிகர்களை நேரில் சந்தித்து தன் சினிமா வாழ்க்கையை பற்றி பேசினாரா என்று தெரியவரும்.

author avatar
Ranjith Kumar