அடுத்த படத்திற்கு பிள்ளையார்சுழி…? பாலிவுட் பிரபலத்தை சந்தித்த சிவகார்த்திகேயன்…. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 25, 2025

Spread the love

காமெடியனாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசான மதராசி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் மும்பையில் உள்ள திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் புதிய படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருவரும் சந்தித்ததற்கான காரணம் வெளியாகவில்லை. இது குறித்து அப்டேட் ஏதாவது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.