வேற மாறி வேற மாறி.. SK21 படத்துக்காக கடுமையாக உழைக்கும் சிவகார்த்திகேயன்.. வெளியாகி வைரலாகும் போட்டோஸ்..

By Ranjith Kumar

Updated on:

ஆர். ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா நடிப்பில் இசை புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்களின் இசையில் R.D ராஜா அவர்களின் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் தான் அயலான், இது பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றியை கண்டது, 96 கோடி பாக்ஸ் ஆபிஸை பெற்று குடும்பங்கள் கொண்டாடும் படமாக திரையரங்கில் ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்தது.

இப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் அவர்கள் ராஜ் கமல் ஃபிலிம் தயாரிப்பில் படம் நடிக்க உள்ளதாக வெளியானது. Sk 21 படத்தை ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய்பல்லவி ஹீரோயின் மேலும் பிரபலமான ராகுல் போஸ், லல்லு ,ஸ்ரீகுமார் இவர்களின் நடிப்பில் G.V பிரகாஷ் இசை அமைத்து ராஜ் கமல் ஃபிலிம் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை முழுக்க முழுக்க ஆர்மி களத்தில் போர் புரியும் காலகட்டத்தில் ஒரு ஆர்மி வீரனாக சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இப்படம் கதை முழுக்க ராணுவ போர் சம்பந்தப்பட்ட கதை என்பதால் கமர்சியலான பாடல்கள் எதுவும் இல்லை கதைக்கு சம்பந்தப்பட்ட பாடலும் ஹீரோ ஹீரோயினிக்கும் இடையில் உள்ள காதல் சம்பந்தப்பட்ட பாடல் மட்டுமே அமைந்துள்ளதாக ஜிவி பிரகாஷ் சமீபத்தில் பேசியிருந்தார்,

   

இப்ப படத்தின் கதை நம் நாட்டின் ராணுவ வீரனான மேஜர் ஒருவரை தழுவி எடுக்கப்பட்டுள்ளது, முன்னாள் மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் அவர்களின் முன்னாள் ஆர்மி களத்தில் போரை கையாண்ட யுக்திகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறதாம். இப்படத்தில் வரும் அனைத்தும் உண்மை சம்பவமாக இருப்பதால், மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் அவர்கள் முன்னாள் ராணுவத்தில் இருந்த பொழுது எப்படி அறிவித்திடனாகவும் உடல் வலிமையாகவும் போர்க்களத்தை சந்தித்து யுக்தியால் வென்றிருப்பாரோ, அதை போல் இப்படத்தில் வரும் சிவகார்த்திகேயன் அவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இது உண்மைச் சம்பவம் என்பதால் இப்படத்தில் வரும் அனைத்தும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னையே உடலை வருத்தி செதுக்கி கொண்டிருக்கிறாராம், மறைந்த முன்னாள் மேஜர் புகுந்தன் போலவே உடலமைப்பை பெறுவதற்கு உடற்பயிற்சி செய்து வருகிறாராம், அந்தப் புகைப்படத்தை தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதைக் கண்ட ரசிகர்கள் மெய்சிலிர்த்து அந்தப் புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் இப்படம் எப்போது திரையரங்குக்கு வரும் என்று ஆவலாக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

author avatar
Ranjith Kumar