சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீயூனியன் விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் சிஎஸ்கே மற்றும் தோனி குறித்து உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்கச்சேரி மற்றும் ஜாம்பவான் வீரர்களின் வருகையோடு களைகட்டிய இந்த விழாவில், தோனியை நேரில் பார்த்தது ஒரு ரசிகனாகத் தனக்கு மிகுந்த பதற்றத்தைத் தருவதாக சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சிஎஸ்கே என்பது வெறும் கிரிக்கெட் அணி மட்டுமல்ல, அது ஒரு எமோஷன் என்று குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், தோனி சேப்பாக்கத்தில் களமிறங்கினால் அதன் அதிர்வு 25 கி.மீ தள்ளி இருக்கும் ஈசிஆர் வரை எதிரொலிக்கும் என்று புகழாரம் சூட்டினார். “வெற்றி தோல்விகளைக் கடந்து ரசிகர்கள் எப்போதும் சிஎஸ்கேவுடன் இருப்போம்; இந்த காட்டிற்கு ராஜாவாக இருக்கும் முஃபாசா (தோனி) மீது நாங்கள் வைத்திருக்கும் அதே நம்பிக்கையை, இப்போது சிம்பாவாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் மீதும் வைத்துள்ளோம்” என்று அவர் உற்சாகமாகப் பேசினார்.
இந்த நிகழ்வில் சிஎஸ்கே அணியின் எதிர்காலம் மற்றும் வீரர்களின் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர்கள் அணியில் இணைந்திருப்பது பலம் சேர்ப்பதாகக் குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், ருதுராஜுக்கு தோனியின் வழிகாட்டலும் ரசிகர்களின் பேராதரவும் பக்கபலமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், சென்னை அணிக்கு 6-வது கோப்பையைப் பெற்றுத் தருவதே ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்ச்சியின் இறுதியில், தோனியிடம் அவரது ஓய்வு குறித்துக் கேட்கப்பட்டபோது, “நிச்சயமாக இல்லை” (Definitely Not) என்ற பதிலை மீண்டும் கேட்கவே ரசிகர்கள் விரும்புவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த தோனி, “வயது மற்றும் உடல் தகுதியைப் பராமரிப்பது கடினமாக இருந்தாலும், தொடர்ந்து முயற்சிக்கிறேன்” எனக் கூறிவிட்டு, மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் “OG is Back” என்று அதிரடியாக முடித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…
ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே உள்ள கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (59).…
ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது சொந்தத் தாய் வழி பாட்டியே…