Connect with us

SK செய்த வேலையால் “அமரன்” படத்திற்கு வந்த சிக்கல்.. ராணுவம் அனுப்பிய Mail..! மிரண்டு போன கமல்..

CINEMA

SK செய்த வேலையால் “அமரன்” படத்திற்கு வந்த சிக்கல்.. ராணுவம் அனுப்பிய Mail..! மிரண்டு போன கமல்..

 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் ராஜ்கமல் ஃபிலிம் தயாரிப்பில் வெளியாகும் “அமரன்” படம் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் எஸ்.கே 21 படத்திற்கான டீசரும் சில புகைப்படங்களையும் தற்போது வெளியிட்டு இருந்தார்கள், அந்த டீசர் மூலமாக இப்படத்தின் டைட்டிலை மக்களிடம் “அமரன்” என்ற பெயரில் அறிவித்து இருந்தார்கள், அந்த டீசர் பெரிதும் ரசிக்கப்பட்டு வைரலாகி வந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த டீசரில் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு கெட்ட வார்த்தை பேசி இருப்பார்.

அதை கண்ட ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் என்ஜாய் பண்ணி வந்தார்கள். ஆனால் ரசிகர்களிடம் அது பெரிய தாக்கம் இருக்காது. ஆனால் சமுதாயத்தில் உள்ள மற்ற விஷயங்களுக்காக சமூகப் பொறுப்பேற்ற பலரும் இதை எதிர்த்து வருகிறார்கள். ஆனால் வழக்கமாக இதை அரசியல் கட்சியோ அல்லது சம சமூக போராளியோ தான் இது போன்ற விஷயங்களை எதிர்த்து குரல் கொடுப்பார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இந்த தடவை வேறொரு பெரிய இடத்திலிருந்து மாபெரும் பிரச்சினையாக கிளம்பி இருக்கிறது.

   

இப்படத்தின் கதைகளம் காஷ்மீரில் உள்ள ராணுவ இடத்தில் மறைந்த முன்னாள் “மேஜர் முகுந்தன்” அவர்களின் வாழ்க்கை சரிதத்தை படமாக இயக்குகிறார்கள். அதனால் இப்ப படப்பிடிப்பு காஷ்மீரில் ஆர்மி தளத்தில் நடப்பதற்காக ஆர்மி கமாண்டோ குழுவிடம் தக்க உரிமம் பெற்று தான் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உரிமை கொடுக்கும் பொழுது சில கண்டிஷங்களை போட்டிருப்பார்கள், அதாவது ராணுவ வீரன் வாழ்க்கை சரிதத்தை எடுப்பதற்காக எந்த தவறான விஷயத்தையும் காட்டக்கூடாது, எந்த தீங்கான விஷயத்தையும் வெளிப்படுத்தக் கூடாது என்ற முறையில் கண்டிஷன் போட்டிருப்பார்கள்.

ஆனால் இப்படத்தில் கெட்ட வார்த்தை பயன்படுத்தியதால், ஒரு வீரனாக உயிரை மாய்த்த மேஜரின் சரிதத்தை எடுக்கும் பொழுது, அவரை கொச்சைப்படுத்தும் விதத்தில் கெட்ட வார்த்தை பேசியது எங்களுக்கு மனக்கசப்பாக உள்ளது, நீங்கள் அப்படி செய்திருக்கக் கூடாது என்று கமல்ஹாசன் நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும் மெயில் ஒன்று போட்டிருக்கிறார்கள். இதை கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டு முழுமனதுடன் மன்னிப்பு கேட்டு இதை படத்தில் நீக்கி விடுகிறோம் இல்லையென்றால் அந்த கெட்ட வார்த்தை வரும் இடத்தில் சென்சார் பண்ணி விடுகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top