இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல அதுக்குள்ள கட்டைய போட்ட எப்படி.. SK23-க்கு வந்த புது பிரச்சனை.. தவிக்கும் சிவகார்த்திகேயன்..

By Ranjith Kumar on மாசி 16, 2024

Spread the love

சிவகார்த்திகேயன் அவர்களுக்கு கடைசியாக வெளியான சில படங்கள் சரியாக போகாமல் இருந்தது, டாக்டர் படத்திற்கு பின்னால் வெளியான பிரின்ஸ் அயலான் சில படங்கள் அதற்குப் போதிய வரவேற்பு கொடுக்கவில்லை. சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தான் வந்து கொண்டிருக்கிறது. நீண்ட நாளுக்குப் பிறகு பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் SK 21 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.இந்த சூழலில் அவருடைய அடுத்த படத்திற்கு எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சனை வந்திருக்கிறது.

அதாவது A.R முருகதாஸ் விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போயிற்று. இப்போது சிவகார்த்திகேயனின் 23வது படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக இசை அமைத்து உள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பை வெளி மாநிலத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வேலையில் இறங்கி இருந்தனர். ஆனால் தென்னிந்திய சங்கத்தினர் வெளிமாநிலத்தில் சூட்டிங் நடத்தக்கூடாது என தயாரிப்பு சங்கத்தினருக்கு கடிதம் கொடுத்திருந்தனர்.இதனால் இப்போது திரைப்படம் மற்றும் சீரியல் அவுட்டோர் ஷூட்டிங்கில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் ஏஆர் முருகதாஸ் கூட்டணி போட்டுள்ள படத்தின் ஆரம்பம் தொடங்கும் முன்னரே பெரிய பிரச்சனை சந்தித்துள்ளது.

   

இப்படம் காஷ்மீரில் உள்ள முன்னாள் காலமான மேஜர் முகுந்தன் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்படும் இப்படம் ஆர்மி களத்தில் போர் புரியும் ஒரு சோல்ஜராக கதை கூறியிருக்கிறது இந்த வேளையில் இப்படத்தை காஷ்மீரில் வைத்து படப்பிடிப்பு நடத்த நினைத்த படக்குழுவிற்கு, இதனால் எவ்வாறு படப்பிடிப்பு நடத்துவது என்று தெரியாமல் பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே வெளிமாநில யூனிட்டுகளை பயன்படுத்துவதில்லை என தயாரிப்பு சங்கத்தினர் முடிவெடுத்த பின்பும் அதனை சிலர் மீறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை அடுத்து தான் இந்த விஷயம் பூதாகரம் எடுத்து வெளி மாநில அவுட்டோர் யூனிட்டை பயன்படுத்த கூடாது என அதிரடியாக கூறியுள்ளனர்.