Connect with us

CINEMA

பால் வடியும் முகமா இருக்காரே.. திருமணத்தில் சிவகார்த்திகேயனுக்கு சோறு ஊட்டிவிடும் மனைவி ஆர்த்தி.. Rare வீடியோ..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். மெரினா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவர், 3, மனம் கொத்தி பறவை, கேடி  பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து  பிரபலமானார்.

   

இவர் நடிப்பில் இறுதியாக ரிலீசான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் எஸ்கே 21 படத்தில் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இதை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இன்னும் வெளிவரவில்லை.

நடிகர் சிவகார்த்திகேயன் சொந்த மாமா மகளான ஆர்த்தி என்பவரை 2010ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் திருமணத்தில் அவரது மனைவி ஆர்த்தி அவருக்கு சாப்பாடு ஊட்டி விடும் பலரும் பார்த்திடாத வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….

Continue Reading

More in CINEMA

To Top