Connect with us

நான் சென்னைக்கு வந்ததே உங்கள் மாதிரி நடிகர் ஆகதான் அண்ணே… பாரதிராஜாவின் ஆசையைக் கேட்டு சிவாஜி அடித்த கமெண்ட்!

CINEMA

நான் சென்னைக்கு வந்ததே உங்கள் மாதிரி நடிகர் ஆகதான் அண்ணே… பாரதிராஜாவின் ஆசையைக் கேட்டு சிவாஜி அடித்த கமெண்ட்!

 

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுவே அவரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. முதல் பட ஹிட் கொடுத்த போது ஏதோ அதிர்ஷ்டத்தில் வென்றதாக பலரும் சொன்னார்கள். ஆனால் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிப் படங்களாகக் கொடுத்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

   

பாரதிராஜா நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு இணைந்து பணியாற்றிய முதல் படம் முதல் மரியாதை. இந்த படத்தின் போது சிவாஜிக்கும் பெரியளவில் மார்க்கெட் இல்லை. அதனால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பே இல்லாமல் இருந்தது.

ஆனால் படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பாரதிராஜா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். ஷூட்டிங்கின் போது எப்படி நடிக்க வேண்டும் என ராதாவுக்கு நடித்துக் காட்டியுள்ளார் பாரதிராஜா. அதைப் பார்த்த சிவாஜி “அவன் சொல்லித் தரதுல்ல ஒரு 10 சதவீதம் நடிச்சாக் கூட போதும். நல்லா வந்துடும்” என சொல்லியுள்ளார்.

அதைக் கேட்டு மகிழ்ந்து பாரதிராஜா “அண்ணே நான் சென்னைக்கு வந்ததே, நடிகர் ஆகி உங்கள காலி பண்ணனும்தான்” என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட சிவாஜி “ஏண்டா உங்க வீட்டுல எல்லாம் கண்ணாடியே இல்லயா? அதுல நீ உன் மூஞ்ச பாத்தததே இல்லையா?” எனக் கமெண்ட் அடித்தாராம். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா நடிகராக தமிழ் சினிமாவில் இப்பொது கலக்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top