Connect with us

SPB-ன் அந்த பாடலை எதேச்சையாகக் கேட்ட சிவாஜி கணேசன்… ரிப்பீட் மோடில் 50 தடவை கேட்டு அதன் பிறகு எடுத்த முடிவு!

CINEMA

SPB-ன் அந்த பாடலை எதேச்சையாகக் கேட்ட சிவாஜி கணேசன்… ரிப்பீட் மோடில் 50 தடவை கேட்டு அதன் பிறகு எடுத்த முடிவு!

 

இந்திய சினிமாவில் அதிக பாடல்களை பாடிய ஆண் பாடகர் என்ற பெருமைக்குரியவர் எஸ் பி பாலசுப்ரமணியன்.  இவர் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ் பி பி சென்னையில் படிக்கும்போது பாடல்கள் பாடுவதில் ஆர்வம கொண்டு அதற்கான வாய்ப்புகளை தேடி வந்தார். அவருக்கு முதலில் பாட வாய்ப்புக் கிடைத்தது தெலுங்கு சினிமாவில்தான்.

1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார்.

   

எம் ஜி ஆருக்காக ஆயிரம் நிலவே வா பாடலை பாடிய பின்னர் கவனிக்கப்படும் பாடகர் ஆனார். ஆனால் அவர் உச்சத்துக்கு சென்றது இளையராஜாவின் வருகைக்குப் பிறகுதான். இளையராஜா இசையில் அதிக பாடல்களை பாடிய பாடகர் என்றால் அது எஸ் பி பிதான்.

இந்நிலையில் எஸ்பிபியின் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை சிவாஜி கணேசன் எப்படி ரசித்தார் என்பதை நடிகர் பிரபு ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். எதேச்சையாக பிரபு வீட்டிலுள்ள டேப் ரெக்கார்டரில் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கே வந்த சிவாஜி கணேசன் அந்த பாடலை மிகவும் ரசித்துக் கேட்டாராம்.

பாடல் முடிந்ததும் சிவாஜி பிரபுவிடம், “பிரபு, இன்னொரு தடவை அந்த பாட்டை போடு.” என்றாராம். பிரபுவும் போட்டுள்ளார். மீண்டும் முடிந்ததும் இன்னொரு முறை போட சொல்லியுள்ளார். முடிந்ததும் மறுபடியும்… மறுபடியும் என இப்படியே 50 முறைக்கு மேல் கேட்டாராம். சிவாஜி அப்படி அந்த பாடலை ரசிப்பதைப் பார்த்து பிரபு ஆச்சர்யப்பட்டாராம்.

அதன்பின்னர் சிவாஜி மிகவும் நெகிழ்ச்சியுடன், “பிரபு, என்னோட அடுத்த படத்துல இந்த பையனை பாட வைக்கணும். விச்சு கிட்ட  (MSV) இது விஷயமா உடனே பேசணும்.” எனக் கூறியுள்ளார். அப்படிதான் சிவாஜிக்காக சுமதி என் சுந்தரி’ திரைப்படத்தில் ‘பொட்டு வைத்த முகமோ’ என்ற பாடலை எஸ்பிபிக்கு பாடும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தாராம். அந்தளவுக்கு சிவாஜியை தனது கந்தர்வ குரலால் எஸ் பி பி கவர்ந்து இழுத்துள்ளார்.

Continue Reading
To Top