நாடகத்தில் நடித்த போது வி கே ராமசாமியின் துணியைத் துவைத்து கொடுத்த சிவாஜி… என்ன காரணம் தெரியுமா?

By vinoth on ஆவணி 3, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.

அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.

   

சிவாஜி கணேசன் நாடகக் கம்பெனியில் சேர்ந்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.  இதுபற்றி அவரே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “எங்கள் ஊரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் போடுவார்கள். அதைப் பார்க்கும் போது எனக்கும் நடிக்க வேண்டும் என ஆசை வந்துவிட்டது. அதனால் நான் நாடகக் கம்பெனிக்கு சென்று அப்பா அம்மா இறந்துவிட்டார்கள் என சொல்லி சேர்ந்துவிட்டேன். அதிலிருந்து 6 வருடங்கள் நான் என் பெற்றோரைப் பார்க்கவேயில்லை. ஒரு வேளை நான் இறந்துவிட்டேன் எனக் கூட அவர்கள் நினைத்திருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

   

நாடக உலகில் சிறுவனாக இருந்த சிவாஜி பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். அப்போது அவருக்கு சம்பளமும் கம்மிதானாம். அதனால் சீனியர் நடிகர்களுக்கு ஒத்தாசையாக ஏதாவது வேலை செய்தால் அவர்கள் தரும் சில்லறையை வைத்து சினிமா பார்க்க செல்வார்களாம்.

 

அப்படிதான் சிவாஜி கணேசன் பல சீனியர் நடிகர்களுக்கு துணி துவைத்துக் கொடுப்பாராம். அப்படிதான் தனக்கு சில ஆண்டுகள் சீனியராக இருந்த வி கே ராமசாமிக்கு அவர் துணி துவைத்துக் கொடுத்துள்ளாராம்.