Connect with us

ரெக்கார்டிங் ரூமுக்குள் விடாமல் சிவாஜியை தடுத்து நிறுத்திய நபர்… அந்த நபரை வறுத்தெடுத்த இளையராஜா!

CINEMA

ரெக்கார்டிங் ரூமுக்குள் விடாமல் சிவாஜியை தடுத்து நிறுத்திய நபர்… அந்த நபரை வறுத்தெடுத்த இளையராஜா!

 

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

இளையராஜா 1976ல் அன்னக்கிளியில் அறிமுகம் ஆனார். அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஆனார். அதனால் அவருக்காகக் காத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆளானார்கள்.

இளையராஜா தான் கடைபிடித்து வந்த ஒழுகக்த்தை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பார். அவரின் கம்போஸிங் அறைக்குள்ளோ அல்லது ரெக்கார்டிங் அறைக்குள்ளோ தேவையில்லாமல் ஒருவர் கூட நுழைய முடியாது. ஒரு ராணுவ ஒழுங்கோடு அவரின் ரெக்கார்டிங் அறை இருக்கும்.

இப்படிதான் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த மன்னன் திரைப்படத்தின் ரெக்கார்டிங் பணிகளை இளையராஜா மேற்கொண்டுள்ளார். அப்போது தயாரிப்பாளரான சிவாஜி கணேசன் அதை பார்வையிட வந்துள்ளார். அந்த அறையில் செக்யூரிட்டியாக இருந்தவர் யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என சொல்லி சிவாஜி கணேசனையே நிறுத்தி விட்டாராம். சிவாஜியும் அதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக வெளியே நின்றுவிட்டாராம்.

எதேச்சையாக வெளிப்பக்கம் பார்த்த இளையராஜா சிவாஜி கணேசனைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டாராம். பதறிப் போய் வெளியே வந்த அவர் செக்யூரிட்டியைக் கண்டபடி திட்டுவிட்டு, சிவாஜி கணேசனை உள்ளே அழைத்துச் சென்றாராம். இத்தனைக்கும் செக்யூரிட்டியாக இருந்த நபர் தமிழர் இல்லையாம். அவருக்கு சிவாஜி யார் என்பதே தெரியாதாம்.

Continue Reading
To Top