சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வசித்து வரும் ஷேக் தாவூத் என்பவரின் 21 வயது மகள் ஆஃப்ரின். இவருக்கும், திருப்பத்தூர் மூலைக்கடை பகுதியைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவரும், திமுக நிர்வாகியுமான சாக்ளா என்பவரின் மகன் முகமது அஷ்ரப் (30) என்பவருக்கும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு கணவர் வீட்டில் வசித்து வந்த ஆஃப்ரின், தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 16-ஆம் தேதி இரவு ஆஃப்ரின் தனது தாய் பாத்திமா பீவியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “அம்மா என்னை இப்பவே வந்து கூட்டிட்டு போயிடுங்க” என்று கதறியுள்ளார். ஆனால், இரவு நேரம் என்பதால் மறுநாள் காலையில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி தாய் ஆறுதல் படுத்தியுள்ளார். தொடர்ந்து, மறுநாள் ஜூன் 17 காலையில் தாய் மகளுக்குத் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில், ஆஃப்ரின் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாத்திமா பீவி அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூர் நகர் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் கோட்டாட்சியர் (RDO) விசாரணையும் நடைபெற்றது. இதற்கிடையே, கணவரின் தந்தை திமுக பிரமுகர் என்பதால் திருப்பத்தூர் அல்லது சிவகங்கையில் பிரேத பரிசோதனை செய்தால் நியாயம் கிடைக்காது எனப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆஃப்ரினின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, கடந்த 19-ஆம் தேதி அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எனினும், “குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்” எனப் பெற்றோர் உறுதியாக மறுத்ததால் உடல் பிணவறையிலேயே வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கணவர் முகமது அஷ்ரப் எப்போதும் மொபைல் போனைப் பார்த்துக் கொண்டு மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், ஆஃப்ரினை தற்கொலைக்குத் தூண்டும் வகையில் அவர் தொடர்ந்து பேசி வந்ததும் அம்பலமானது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், 4 மாத கர்ப்பிணியான தனது மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக, கணவர் முகமது அஷ்ரப்பை திருப்பத்தூர் நகர் போலீசார் சம்பவம் நடந்த 8 நாட்களுக்குப் பிறகு அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…