மீடியாவே வேணாம்னு நினைச்சேன் ; எனக்கு அறிவும் கம்மி, ஆனா….. முதல்முறையாக ரகசியம் பகிர்ந்த சிவாங்கி

By Deepika

Published on:

விஜய் டிவியில் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் தான் சிவாங்கி. குழந்தை தனமான பேச்சால் மக்களை கவர்ந்த இவர் தேன் போன்ற குரலால் பாடி மக்களை ஆச்சர்யப்படுத்தினார். இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது குக் வித் கோமாளி தான். நான்கு சீசன்களில் கோமாளியாக கலக்கிய இவர், ஐந்தாவது சீஸனின் செப் அவதாரம் எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

Sivaangi family

இவர் பாடகர்கள் கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார். பின்னியின் குறை யாராலும் மறக்கவே முடியாது. சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ரா ரா பாடலை பாடியதே பின்னி தான். இப்படிப்பட்ட பாடகர்களுக்கு மகளாக பிறந்த சிவாங்கி பாடுவதை ஆச்சர்யம் இல்லை என்று தான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் பாடல் பாடவே சிவாங்கிக்கு வராதாம், அதுமட்டுமல்ல மீடியா பக்கமே போக கூடாது என நினைத்ததாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் சிவாங்கி.

   
Sivaangi about her life

அவர் கூறியுள்ளதாவது, எனக்கு பாட்டு பாடவே வராது, என் அப்பா அம்மா கவலையுற்றனர். எனக்கு அறிவும் கம்மி, நான் மீடியா பக்கமே வரக்கூடாது என நினைத்தேன், ஆனால் என் விதி அப்படியே நேர்மாறாக இருந்தது. சி.ஏ படித்து 9 – 5 வேலைக்கு சென்று அதன்பின் பாட்டு கற்றுக்கொள்ளலாம் என நினைத்தேன் ஆனால், ஒருநாள் என் அம்மா எனக்கு போன் செய்து, சூப்பர்சிங்கர் ஆடிசன் நடக்குது கலந்துகொள்ள, அங்கு சென்றாவது பாட்டு கற்றுக்கொள் என்கிறார். நானும் சென்றேன். அங்கு தான் என் வாழ்க்கையே மாறியது.

Sivaangi

இப்போது நான் நினைத்ததை விட சந்தோசமாக உள்ளேன். பல மக்களுக்கு என்னை பிடிக்கிறது, பலரின் அன்பு எனக்கு கிடைக்கிறது. இதையெல்லாம் நான் துல்லியம் எதிர்பார்க்கவில்லை. மீடியா வேண்டாம் என நினைத்தேன் ஆனால் இத்தனை பேரின் அன்பு எனக்கு கிடைக்க மீடியா தான் காரணம் என்றார் சிவாங்கி.

author avatar
Deepika