அட கடவுளே… பிருந்தாவனம் ஆசிரமத்தில் அடுத்தடுத்த மர்மங்கள்… 3 மாசமா என் மகனைப் பார்க்கக் கூட விடல?… 16 வயது சிறுவனை மீட்கத் தர்ணா போராட்டம்… உ . பி – யில் நடந்த சம்பவம்…!!

By Swetha on ஐப்பசி 3, 2026

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த 16 வயதான அனுஜ் குமார் என்ற சிறுவன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பிருந்தாவனில் உள்ள பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்திற்கு வந்து அவருடைய சீடராக மாறினான். எனினும், ஆசிரமத்திற்கு வந்த நாள் முதல் கடந்த மூன்று மாதங்களாகத் தங்கள் மகனைச் சந்திக்க ஆசிரம நிர்வாகம் அனுமதி மறுப்பதாகக் கூறி, அனுஜின் குடும்பத்தினர் தற்போது ஆசிரமத்தின் வெளியே தீவிர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, இதே ஆசிரமத்தில் தங்கியிருந்து உயிரிழந்த ரசிகா துலாரி என்ற பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாகவும், அவரது குடும்பத்தினர் இதே போன்ற குற்றச்சாட்டையே முன்வைத்திருந்தனர். தங்கள் மகளைச் சந்திக்க விடாமல் ஆசிரமத்தினர் தடுத்ததாக அவர்கள் கூறியிருந்த நிலையில், தற்போது 16 வயது சிறுவனின் குடும்பத்தினரும் அதே புகாரை எழுப்பியிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

   

தொடர்ந்து ஆசிரமத்தின் மீது இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் எழுந்து வரும் நிலையில், மக்கள் மத்தியிலும் பக்தர்களிடையேயும் எழும் பல கேள்விகளுக்கு பிரேமானந்த் மகாராஜ் உடனடியாக நேரடியாக வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று சிறுவனின் குடும்பத்தினரும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.