இந்த ஆண்டுக்கான சிறந்த விஜய் டிவி சீரியல் எது தெரியுமா?.. 8 விருதுகளை தட்டி தூக்கிய அந்த சீரியல் இதுதான்..!

By Nanthini on புரட்டாதி 9, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாகவே தொலைக்காட்சி தொடர்கள் என்றால் பெரியவர்களுக்கு தான் பிடிக்கும் என்ற ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் அதனை உடைத்து சிறகடிக்க ஆசை சீரியல் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிலும் கடந்த சில வாரங்களாக நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துள்ளது.

   

இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியின் இந்த ஆண்டுக்கான சிறந்த தொடராக சிறகடிக்க ஆசை சீரியல் தொடர் தேர்வாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு விஜய் டிவி சார்பாக ஒவ்வொரு வருடமும் விஜய் டெலிவிஷன் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் இந்த வருடம் சிறந்த தொலைக்காட்சி தொடராக சிறகடிக்க ஆசை சீரியல் தேர்வாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறந்த நடிகையாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோமதி பிரியாவும், சிறந்த நாயகனாக முத்து கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெற்றி வசந்த்தும் தேர்வாகியுள்ளனர்.

   

 

அது மட்டுமல்லாமல் இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குனர் சிறகடிக்க ஆசை சீரியல் இயக்குனரும், சிறந்த துணை நடிகையாக ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவரும், சிறந்த துணை நடிகராக மனோஜ் கதாபாத்திரத்தில் நடித்து வருபவரும், சிறந்த மாமியாராக விஜயாவும், சிறந்த மாமனராக விஜயாவின் கணவரும் என மொத்தம் எட்டு விருதுகளை சிறகடிக்க ஆசை சீரியல் தொடர் வென்றுள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay Television இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijaytelevision)