Connect with us

மீனாவைப் பார்த்து வயித்தெரிச்சல் படும் ரோகிணி…!புலம்பும் மனோஜ்…!சிறகடிக்க ஆசை ஆசை இன்றைய எபிசோட்…!!!

CINEMA

மீனாவைப் பார்த்து வயித்தெரிச்சல் படும் ரோகிணி…!புலம்பும் மனோஜ்…!சிறகடிக்க ஆசை ஆசை இன்றைய எபிசோட்…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை.முத்து மற்றும் மீனாவிற்காக இந்த சீரியலை பார்க்க பலரும் காத்திருக்கிறார்கள். இன்றைய எபிசோடில் முத்து மீனாவிற்காக நடமாடும் பூக்கடை ஒன்றை வாங்கி தருகிறார்.

இதற்காக குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தனித்தனியாக போன் செய்து கீழே வரும்படி கூறுகிறார். அவர்கள் அனைவரும் வந்த பிறகு ஸ்கூட்டி ஒன்றை அறிமுகம் செய்து இதுதான் மீனாவின் பூக்கடை என்று கூறுகிறார்.

   

 

இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார் மீனா. இதைத் தொடர்ந்து மீனா தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்த அனைவரிடமும் விஷயத்தை கூறுகிறார். ஆனால் அவரின் தம்பிக்கு இது பிடிக்கவில்லை. அவர் கோபமாக பேசுகிறார் .

அதையடுத்து மனோஜ் நான் எதற்குமே லாயக்கில்லை என்று கூறி ரோகினிடம் புலம்பி வருகிறார்.நான் மட்டும் குளத்துல போட்ட கல்லாட்டம் அப்படியே இருக்கே எல்லோரும் முன்னேறி போய்கிட்டு இருக்காங்க என்று கூற ரோகிணி அவரை சமாதானப்படுத்துகிறார்.

மேலும் 27 லட்சத்தை திருடிட்டு போன அந்த பொண்ண எப்படியாவது கண்டுபிடிச்சு அந்த பணத்தை அவ கிட்ட இருந்து வாங்கணும் என்று யோசனை கூறுகிறார். ரோகிணி மொத்த பணத்தையும் ஆட்டையை போட பிளான் செய்துவிட்டார் ரோகினி.

இதற்கிடையில் முத்து மீனாவிற்கு வண்டி வாங்கி கொடுத்ததை எண்ணி சுருதி சந்தோஷமடைகிறார்.முத்துவின் கேரக்டரையும் அவர் புரிந்து கொள்கிறார். இப்படி அனைவரும் ஒற்றுமையாக இருக்க விஜயா மற்றும் ரோகினி இருவரும் தனியாக இருந்து வருகிறார்கள்.

 

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top