தமிழ் சினிமாவில் தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. தினமும் மாலை தொடங்கிய இரவு வரை ஒளிபரப்பாகும் சீரியல்களை குடும்பப் பெண்கள் பலரும் விடாமல் பார்த்து வருகிறார்கள், அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் இருக்கும் சீரியல்களை பலரும் ஆர்வமுடன் கண்டு கழித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல்தான். இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. அண்ணாமலை என்ற ஒருவரின் குடும்பத்தில் இருக்கும் மனைவி, மகன்கள், மருமகள்கள் ஆகியோர் இடையே நடக்கும் கதையை மிகவும் எதார்த்தமாக எடுத்துக் கூறும் கதைக்களம் கொண்டு நகர்ந்து வருகின்றது.
இந்த கதையில் தற்போது முத்துவும் மீனாவும் சேர்ந்து கிரிஷை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். இதை பார்த்து ரோகினி கோபமடைகிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு கட்டத்தில் கிரிஸ்க்கு ரோகிணி தான் அம்மா என்பது தெரிய வருகின்றது. இது மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. இருப்பினும் அந்த வீட்டில் இருந்து கிரிஷையும் அவரது அம்மாவையும் எப்படியாவது வெளியேற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ரோகினி தொடர்ந்து பிளான்களை போட்டு செயல்படுத்தி வருகின்றார்.
அடுத்ததாக க்ரிஷ் தனது கண் கட்டை பிரித்தவுடன் முதலில் தனது அம்மாவான ரோகினியை தான் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அதுபோலவே கிரிஸ்க்கு கண்கட்டை பிரிக்கும் போது ரோகிணி மருத்துவமனைக்கு செல்கின்றார். இருவரும் கட்டி தழுவி இருக்கும் சம்பவத்தை மீனாவும் பார்த்து விடுகின்றார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் நாளை என்ன நடக்கப் போகின்றது என்பது தொடர்பான சிறிய ப்ரமோ வெளியாகி இருக்கின்றது.
அதில் முத்துவும் மீனாவும் நம்ம வீட்டில் கூடிய சீக்கிரமே ஒரு குழந்தை சத்தம் கேட்கப் போகிறது. பார்லர் அம்மாவுக்கு அந்த ஆசை வந்துவிட்டது என்று கூற இதனை மனோஜ் ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கின்றார். பின்னர் மனோஜ் உனக்கும் நமக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று தோன்றுகிறது அப்படித்தானே என்று கேட்க உடனே ரோகினி முறைத்து பார்க்கின்றார். அதைத்தொடர்ந்து மனோஜ் நீ வெட்கப்படுவது கூட பார்ப்பதற்கு முறைத்து பார்ப்பது போல் இருக்கின்றது என்று கூறி காமெடி செய்து வருகின்றார். இப்படி ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
View this post on Instagram