திரையுலகில் அடுத்தடுத்த அதிர்ச்சி…. திடீரென காலமான பிரபல ‘சிறகடிக்க ஆசை’ நடிகர்…. சோகத்தில் ரசிகர்கள்…..!

By Nanthini on ஆடி 29, 2026

Spread the love

பிரபல தமிழ் தொலைக்காட்சி தொடரான ‘சிறகடிக்க ஆசை’ உட்பட பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்ற மூத்த நடிகர் ஜெயமணி, வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

‘லக்கி மேன்’, ‘முத்தாராம்’, ‘அழகன்’ போன்ற திரைப்படங்களிலும், ‘ஹர ஹர மகாதேவி’ உள்ளிட்ட பல தொடர்களிலும் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த இவரது மறைவு, தமிழ் சின்னத்திரை மற்றும் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலை உலகில் தனக்கென தனி இடத்தைப்பிடித்த இவரது ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கு, திரையுலகக் கலைஞர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.