சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மனோஜ் ரோகினியும் ஏமாந்து போவதற்கு ஒரு ஆளை தேடி கண்டுபிடித்தார் போல இருக்கிறார்கள். அவர்கள் இவர்களை ஏமாற்ற திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள். மீனா தான் டெக்கரேஷன் செய்த இடத்தில் இருந்து பேமெண்ட் வாங்கிய லாபம் கிடைத்துவிட்டது என்ற முத்துவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் முந்தைய நாள் மீனா நான்தான் ரொம்ப இப்போ பணம் சம்பாதிக்கிறேன் அப்படின்னு சொன்ன வார்த்தையை கேட்டு மனமுடைந்து இருந்த முத்து காலையில் இருந்து காணவில்லை. எழும்பியதிலிருந்து மீனா முத்துவை தேடிக் கொண்டிருக்கிறாள். அண்ணாமலை இடம் கேட்கிறார். அவரோ ஏதாவது வேலையா போயிருப்பான்னு வந்துருவா என்று சொல்லுகிறார்.
நேரம் போகப் போக முத்துக்கு திரும்ப திரும்ப போன் அடிச்சு பார்க்கிறாள் மீனா போனே போகவில்லை. உடனே கார் செட்டுக்கு செல்கிறாள் மீனா. அங்கு சென்று முத்துவின் நண்பர்களிடம் அவரை காணவில்லை போன் பண்ணினா எடுக்கமாட்டிக்கிறார் என்று கூறுகிறார். முத்துவின் நண்பர்களும் எவ்வளவு பிசியா இருந்தாலும் உன் போனை எடுக்காம இருக்க மாட்டானே என்னன்னு தெரியலையே நாங்க போன் பண்ணி பாக்குறோம் ஏதாவது தகவல் தெரிஞ்சா சொல்றோம் என்று அனுப்பி வைக்கிறார்கள்.
வீட்டுக்கு வந்து சுருதி மீனா விடம் காபி கேட்கிறார். அப்போது ஏன் டல்லா இருக்கீங்க என்று கேட்கும்போது அவரை காலையிலிருந்து காணும் என்று மீனா கூறுகிறார். ஏதாவது ஆஃபர் வந்திருக்கும் சவாரிக்கு போயிருப்பாங்க மீனா நீங்க கவலைப்படாதீங்க அவர் சின்ன குழந்தையா வந்துருவாங்க என்று சொல்கிறார். அடுத்ததாக நேரம் போக போக மீனாவிற்கு மனது கேட்கவே இல்லை காலையாகிறது மதியம் ஆகிறது முத்துவிடம் இருந்து போன் வரவில்லை ஆளும் காணவில்லை.

உடனே சத்யாவுக்கு போன் செய்து மாமாவை காணோம் டா நீ வாடா தேடி பார்க்கலாம் என்று கூப்பிடுகிறாள். அடுத்ததாக அவர்கள் தேடிய இடமெல்லாம் முத்து இல்லை. அந்த செருப்பு தைக்கும் பாட்டி தாத்தாவிடம் போய் கேட்கலாம் என்று போகிறார்கள். அவர்களும் எங்களுக்கு தெரியவில்லை என்று கூறுகிறார்கள். இதற்கிடையில் விஜயா பார்வதி வீட்டுக்கு சென்று மனோஜ் பங்களா வாங்க போகிற விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறாள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
