சிறகடிக்க ஆசை தொடரின் சனிக்கிழமை எபிசோடில் மீனாவுக்கு டெக்கரேஷன் பண்ணும் ஆர்டர் கிடைக்கிறது. ரோகிணியின் மலேசியா மாமாவாக நடித்தவர் மீனா கண்ணில் மாட்ட இருந்தார். அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

மீனா கறி எல்லாம் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறாள். முத்து மீனா முத்துவின் தம்பி அனைவரும் பிரியாணி சேர்ந்து சமைக்கின்றனர். விஜயாவும் மனோஜும் விரதம் என்பதால் சாப்பிட முடியவில்லை என்று கவலையில் இருக்கின்றனர். ரோகினி மனோஜிடம் நல்லவேளை மனோஜ் உனக்கு பிடிச்சவங்க யாருனு கேட்கும் போது நீ ஆன்ட்டி பேரை சொன்ன என் பேரை சொல்ல நான் நல்லா பிரியாணி சாப்பிடுவேன் என்று கூறுகிறாள்.
பிரியாணி செய்துவிட்டு அனைவரும் நன்றாக சாப்பிடுகிறார்கள். இதை பார்த்து விஜயாவும் மனோஜும் சாப்பிட முடியவில்லை என்று காமெடியாக முகத்தில் ரியாக்ஷன் கொடுத்துவிட்டு இருக்கின்றனர். அடுத்ததாக மலேசியா மாமா வித்யாவிற்கு போன் செய்து வர வைத்திருக்கிறார். ரோகிணி அங்கு சென்றார். வித்யாவிடம் ரோகினி என்ன பிரச்சனை உடனே கூப்பிட்ட என்று கேட்கும் போது மலேசியா மாமா வருகிறார். அவர் வந்து நேத்து ஒரு நிமிஷத்துல நான் மீனா கிட்ட மாட்டியிருப்பேன் மா ஜஸ்ட் மிஸ் ல தப்பித்து விட்டேன் என்று சொல்கிறார்.
ரோகினி நீங்க அந்த இடத்துல இருக்காதீங்க உங்க கடையை மாத்திடுங்க வேற இடத்துக்கு போயிருங்க என்று சொல்கிறார். உடனே அந்த மலேசியா மாமா அது எப்படிம்மா என்னால போக முடியும் நான் பிறந்தது வளர்ந்தது என்னோட தொழில் அங்க தான் இருக்கு. என்னோட கஸ்டமர் எல்லாம் அங்க தான் இருக்காங்க. நான் என் பொழப்ப விட்டுட்டு நான் வர முடியாது உனக்கு நான் உதவி செஞ்சேன்.
நாளைக்கு என் வாழ்க்கைக்கு என் வாழ்வாதாரத்துக்கே பிரச்சனை வருதுன்னா என்னால விட முடியாது. நானா அவங்க கிட்ட போய் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால் நான் அவங்க கிட்ட மாட்டிகிட்டா நான் உண்மையை சொல்லிடுவேன் என்று அவர் தீர்க்கமாக சொல்லிவிட்டு செல்கிறார். ரோகிணி இதை நினைத்து வருத்தப்படுகிறாள். வித்யாவிடம் எனக்கு நாலா பக்கமும் சுத்தி பிரச்சன நெருக்கி கிட்டே வருது நான் என்ன செய்ய போறேன்னு தெரியல என்று சொல்லிவிட்டு சொல்கிறாள்.
அடுத்து மீனாவை காரில் முத்து கூட்டி செல்கிறான். இருவரும் டெக்கரேஷன் பற்றி பேசிக்கொண்டு வருகிறார்கள். இந்த ஆர்டரை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். அப்போது முத்து ஒரு இடத்தில் காரை நிறுத்தி உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று வெளியே சென்று வருகிறான். வந்து மீனாவின் கையில் ஒரு பாக்கெட் கொடுக்கிறான். அதை திறந்து பார்த்ததும் மீனா கண்கலங்கிவிட்டாள்.

மீனா பெயரை போட்டு விசிட்டிங் கார்டு அடித்திருக்கிறார் முத்து. நீ பாதி கார்டு வச்சுக்க மீனா நான் பாதி கார்டு வச்சிக்கிறேன். எனக்கு தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் நான் கொடுக்கிறேன். இந்த விசிட்டிங் கார்டு கொடுத்தா நமக்கு இன்னும் நிறைய ஆர்டர் கிடைக்கும் உன்னோட பிசினஸ்ல நீ மேல போகலாம் அப்படின்னு சொல்கிறான். உடனே மீனா கண்கலங்கி எப்படி எத்தனை புருஷன் எப்படி பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணுவாங்க பொண்டாட்டி நம்மளை விட வளர கூடாதுன்னு நினைக்கிறவங்க தான் நிறைய பேர் இருக்காங்க நீங்க எனக்கு கிடைச்சது ரொம்ப பெரிய வரம் என்று சொல்லி கண்கலங்குகிறாள் மீனா. அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
