தம்பியால் கேள்விக்குறியான மீனாவின் வாழ்க்கை.. கோபத்தில் விஜயா எடுத்து அதிரடி முடிவு.. சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்..!

By Nanthini on கார்த்திகை 4, 2024

Spread the love

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், ரோகிணி மீனாவின் தம்பி திருடிய சிசிடிவி வீடியோவை மாமியார் விஜயாவிடம் காட்டிக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்து கோபமடையும் விஜயா ரோகினியை அழைத்துக்கொண்டு மீனாவின் வீட்டிற்கு செல்கிறார். மீனா வீட்டில் அமர்ந்து தனது தம்பி தங்கையுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் விஜயா கோபத்துடன் வீட்டிற்கு உள்ளே வருகிறார். சத்யா இருக்கும் ரூமுக்கு சென்று அவரை அடித்து இழுத்துக் கொண்டு வெளியே வருகிறார். மீனாவும் அவருடைய அம்மாவும் எதுக்கு இப்படி பண்றீங்க என்று விஜயாவிடம் கேட்டுக் கொண்டிருக்க அனைவரையும் தள்ளி விட்டுவிட்டு சத்யாவை விஜயா அடிக்கிறார்.

   

உடனே மீனாவின் அம்மா நீங்க பண்றது எல்லாம் உங்க வீட்ல நாங்க பொறுத்துக்கிட்டோம் எதுக்கு எங்க வீட்டுக்கு வந்து என் பையனை இப்படி அடிச்சுகிட்டு இருக்கீங்க எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு என்று கூறுகிறார். மீனாவும் விஜயாவின் கையை தடுத்து நிறுத்த எதுக்கு என் தம்பியை இப்படி அடிக்கிறீங்க என்று கேட்கிறார். உன் தம்பி ரொம்ப யோக்கியனா அவனே ஒரு திருட்டு பையன் அவனை அடிக்காமல் என்ன பண்ண முடியும் என்று விஜயா கேட்கிறார். போதும் நிறுத்துங்க அத்தை என் தம்பி மேல வீண் படி போடாதீங்க எதுக்கு இப்படி அடிச்சுட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க என்று மீனா கேட்க விஜயா வீடியோவை காட்டுகிறார். இதனைப் பார்த்து வீட்டில் உள்ள அனைவருமே அதிர்ச்சி அடைகின்றனர்.

   

 

அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவரும் வீட்டிற்கு முன்பு கூடுகின்றனர். மீனா சத்யாவை அடித்து விட்டு கதறி அழுகிறார். விஜயாவும் இது திருட்டு குடும்பம் அதிலிருந்து வந்த நீ எப்படி இருப்பாய் என்று மீனாவை திட்டுகிறார். அது மட்டுமல்லாமல் இனி நீ வீட்டுக்கு வரவே கூடாது இனி என்ன அத்தன்னு நீ கூப்பிடாத என்று மீனாவை திட்டுகிறார். பிறகு சத்யாவை அடித்து இழுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைப்பதாக கூறி இழுத்துச் செல்கிறார். கூடவே ஓடும் சத்யாவின் அக்கா மீனாவும் தங்கையும் சத்யாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அத்தை விட்டுருங்க என்று கதறி அழுகின்றனர்.

மீனாவின் அம்மா அழுது கொண்டு அப்படியே நிற்கிறார். அப்போது அந்த இடத்திற்கு வரும் ஹவுஸ் ஓனர் உங்க பிரச்சனையை வெளியில கொண்டு போய் வச்சுக்கோங்க எங்க வீட்ல எதுவும் பண்ணாதீங்க என்று கூறி திட்டுகிறார். உடனே விஜயா உன்ன ஜெயில்ல தள்ளி கடித்திங்க விடாம நான் விடமாட்டேன் டா அப்படின்னு கூறிவிட்டு கோபத்துடன் அங்கிருந்து கிளம்புகிறார். மீனாவும் அவருடைய குடும்பத்துடன் அமர்ந்து கொண்டே வீட்டில் அழுது கொண்டிருக்கிறார். மீனாவின் அம்மா உங்கள உங்க அப்பாவும் நானும் கஷ்டப்பட்டு வளர்த்தோம் ஆனால் யாரையும் நாங்க ஏமாத்தல. இவனால இப்ப என்னால வெளியில போக முடியல ரொம்ப அவமானமா இருக்கு என்று கூறிவிட்டு கதறி அழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.