Categories: சினிமா

உண்மையை உளறிய முத்து.. போனை அலேக்காக தூக்கிய ரோகினி.. சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு..!

Spread the love

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், மனோஜ் வைத்த பார்ட்டியில் அங்கிருக்கும் அனைவரிடமும் சேர்ந்து ரவி மற்றும் முத்து அனைவருமே குடித்து விடுகின்றனர். குடித்துவிட்டு அனைவரும் பாட்டுப் பாடி நடனமாடி கொண்டிருக்கும் சமயத்தில் ரோகினி முத்துவின் போனை வாங்கி வீடியோ எடுப்பது போல நடித்து முத்து போனில் இருக்கும் மீனா தம்பியின் வீடியோவை எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ஏன் போன வச்சுக்கிட்டு நீ என்ன பண்ற அப்படின்னு சொல்லிட்டு ரோஹினியிடம் இருந்து முத்து போனை வாங்கி விடுகிறார். பிறகு எம்ஜிஆர் மற்றும் கண்ணதாசன் என அடுக்கடுக்கான பாடல்களை அனைவரும் பாடி நடனமாடி கொண்டிருக்கும் சமயத்தில் முத்து நான் கண்ணதாசன் ரசிகர் என்று கூறுகிறார்.

அப்போது டீலர்ஷிப் செய்ய வந்தவர் கண்ணதாசன் ரசிகர் என்னைக்குமே பொய் சொல்ல மாட்டார் நேர்மையாக தான் இருப்பார் அது போல தான் நீங்களும் இருக்கீங்க என்று முத்துவிடம் கூறுகிறார். இதனால் முத்து உண்மையை மறைக்க முடியாமல் நான் கார் டிரைவர் தான் என் தம்பி ஹோட்டல்ல வேலை பார்க்கிறான் என் பொண்டாட்டி பூ கட்டுற என்று உண்மையை உளறி விடுகிறார். இதனால் ரோகிணியும் மனோஜும் பதற்றத்துடன் இருக்க அந்த டீலர்ஷிப் நீங்க உண்மையிலேயே கண்ணதாசன் ரசிகர் என்று நிரூபிச்சிட்டீங்க அதனாலதான் உங்களால கொஞ்ச நேரம் கூட பொய் சொல்ல முடியல. உங்க தம்பிக்காக ஒட்டு மொத்த குடும்பமும் பொய் சொல்லி நடிச்சிருக்கீங்க அதனால உங்க தம்பிக்கு இந்த ஆர்டரை நான் கொடுக்கிறேன் என்று அவர் சொல்லுகிறார்.

பிறகு முத்து அங்கிருந்து தள்ளாடி கிட்ட வர மீனா படியிலிருந்து இறங்கி வருகிறார். சாரி மீனா என்ன மன்னிச்சிடு நான் தெரியாம குடிச்சிட்டேன் கோபப்படாதே என்று முத்து கூற உடனே மீனா உங்க மேல கோவம் தான் வருது இருந்தாலும் அக்கறை இருக்கு வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கூட்டிட்டு கிளம்புறாங்க. ரோகினி, மீனா மற்றும் ஸ்ருதி மூவரும் தங்கள் கணவர்களை அழைத்துக் கொண்டு லிப்டில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது ரோகிணி முத்துவின் போனை எடுத்து மனோஜ் பாக்கெட்டில் போட்டு விடுகிறார்.

பிறகு அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வரும் நிலையில் முத்துவின் அப்பா கதவை திறந்து பார்க்கும் போது அதிர்ச்சி அடைகிறார். மூன்று பேரும் குடித்து இருந்ததால் அவர் கோபப்பட்டு கத்துகிறார். அந்த சமயம் வந்த விஜயா இவங்க குடிச்சதுக்கு முத்து தான் காரணமா இருப்பான் இவங்களையும் அவன் கெடுத்துட்டான் என்று திட்டுகிறார். உடனே மீனா விஜயாவிடம் சண்டை போடுகிறார். பிறகு மருமகள்களை மட்டும் உள்ளே வர சொல்லிவிட்டு மகன்களை வெளியே படுக்குமாறு முத்துவின் அப்பா கூறுகிறார். இதனால் ரோகிணி பதற்றத்துடன் இருக்க இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Nanthini

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

6 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

6 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

6 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

7 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

7 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

7 மணத்தியாலங்கள் ago