ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்கு வரும் முத்து.. வீட்டை விட்டு வெளியேறும் ஸ்ருதி.. சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்..!

By Nanthini on ஐப்பசி 12, 2024

Spread the love

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், போலீஸ் ஸ்டேஷனிலிருந்து முத்துவை மீனா வீட்டிற்கு அழைத்து வருகிறார். அப்போது விஜயா வாசல் தெளித்து கொண்டிருக்கும்போது மீனா அத்தை நீங்க ஏன் இந்த வேலையெல்லாம் செய்றீங்க நான் பாத்துக்குறேன் என்று கூறுகிறார். ஆமா நீ அப்படியே வீட்ட விட்டுட்டு போயிட்டா இதெல்லாம் யாரு பார்க்கிறது என்று விஜயா கூறுகிறார். உடனே முத்துவை ஸ்டேஷனில் இருந்து அழைத்து வர சென்றதாக மீனா கூறும் நிலையில் விஜயா அவர்களை திட்டுகிறார். அந்த சமயத்தில் வரும் விஜயாவின் கணவர் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். பிறகு மீனா ஆரத்தி எடுத்து முத்துவை உள்ளே வர சொல்லும் நிலையில் முத்துவும் மீனாவும் முத்துவின் தந்தை காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றனர்.

   

பிறகு அவரை சமாதானப்படுத்தி விட்டு வீட்டிற்கு உள்ளே செல்கிறார்கள். அடுத்ததாக ரவி ஹோட்டலுக்கு கிளம்ப ரெடி ஆகி கொண்டிருக்கும் சமயத்தில் ஸ்ருதி படுத்து கொண்டிருக்கிறார். உடனே எழுந்து ரவி நீ எங்க கிளம்பிட்ட எனக்கு ரொம்ப பீவரா இருக்கு என்று கூறுகிறார். நான் ஹோட்டலுக்கு முக்கியமான ஆர்டர் ஒன்னு இருக்கு அங்க போயிட்டு வரேன் நீ டேப்லெட் போட்டு ரெஸ்ட் எடு சீக்கிரமா வந்துடுறேன் என்று கூறுகிறார். ஆனால் ஸ்ருதி , எனக்கு உடம்பு சரியில்லை என்றால் அம்மா வீட்டில் கூட இருந்து பார்த்துப்பாங்க. நீதான் என்னை இங்க பார்த்துக்கணும் லீவு போடு எங்கேயும் போகாத என்று கூறுகிறார். இருவருக்கும் இடையே சண்டை வர ஒரு கட்டத்தில் ஹோட்டலில் இருந்து ஓனரின் பொண்ணு ரவிக்கு கால் செய்கிறார்.

   

 

அப்போது ரவி என்னால் இன்று வர முடியாது என்று கூற உடனே அவர் இது முக்கியமான ஆர்டர் நீங்கதான் எல்லாத்துக்கும் பொறுப்பு கொஞ்சம் வந்து முடிச்சு கொடுத்துட்டு போங்க என்று கூறுகிறார். உடனே ரவி சரி என்று கூறிவிட்டு ஸ்ருதியை பார்த்துக் கொள்ள சொல்லி மீனாவிடம் கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இதனால் கோபத்தில் இருந்த ஸ்ருதி வீட்டை விட்டு கிளம்புகிறார். அப்போது மீனா அவரை எவ்வளவு தடுத்து நிறுத்த முயற்சி செய்து முடியவில்லை. விஜயாவும் போகாத என்று கூறியும் உங்க பையன் கூட என்னால வாழ முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து ஸ்ருதி செல்கிறார். அந்த சமயத்தில் முத்து வீட்டிற்கு உள்ளே வரும்போது மீனா நடந்ததை கூறுகிறார். பிறகு விஜயா உடனே ரவிக்கு போன் செய்து என்னடா உன் பொண்டாட்டி என் பேச்சைக் கேட்காமல் அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டே இருக்கா என்று கூறுகிறார்.

அதிர்ச்சியில் உறைந்த ரவி என்னமா சொல்றீங்க எதுக்கு அவ போனா நான் தான் சீக்கிரம் வந்துடுறேன்னு சொல்லிட்டு வந்தேன்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நான் வரும்போது அவள போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரேன் என்று விஜயாவிடம் கூறுகிறார். ஆனால் நீ எல்லாம் அங்க போகக்கூடாது அவளுக்கு எவ்வளவு திமிரு இருந்தா நான் சொல்றதை கேட்காமல் போவா ஒழுங்கா வீட்டுக்கு வந்து சேரு என்று கூறி ரவியை மிரட்டுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் ரவி முழித்துக் கொண்டிருக்க இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.