முத்து – மீனாவை பிரிக்க பிளான் போடும் சுருதி.. வீட்டை விட்டே விரட்ட தயாரான விஜயா.. சுவாரசியத்தை ஏற்படுத்தும் சிறகடிக்க ஆசை..!!

By Nanthini on டிசம்பர் 7, 2023

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஸ்ருதி மற்றும் ரவி மீண்டும் அனைவரிடம் சேர்ந்து வாழ முடிவு செய்த நிலையில் தன்னுடைய வீட்டிற்கு மகாலட்சுமி வந்துவிட்டால் இனிமேல் பணகஷ்டம் எதுவும் வராது என்று விஜயா நிம்மதியுடன் உள்ளார். ஆனால் ஸ்ருதி வீட்டிற்குள் வந்த முதல் நாளே பெட்ரூம் பிரச்சனை வந்து விடுகிறது. விஜயா மீனாவை பெட்ரூம் கொடுக்க சொல்கிறார். ஆனா மீனா அதற்கு மறுப்பு தெரிவிக்க விஜயா நீங்கள் ஒரே வீட்டில் குடும்பத்துடன் ஒரே ரூமில் அண்டி இருந்தவங்க தானே இப்ப என்ன உனக்கு தனி ரூம் கேட்குது, எனக் கேட்க மீனா என் கணவர் எப்படி இதற்கு ஒத்துக் கொள்வார் என கேட்கிறார்.

   

அவனையும் உன் பேச்சை கேட்க வைத்து மொட்டை மாடி அல்லது ஹாலுக்கு சென்று போய் படுங்க என கோபமாக கூறுகிறார். மீனா என் கணவரும் தான் பணம் கொடுக்கிறார் அதனால் நாங்கள் இங்கதான் இருப்போம் என கூறுகின்றார். இப்படி பிரச்சனை ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் ஸ்ருதியும் ரோகினையும் தனியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

   

 

 

அப்போது முத்துவிடம் இருந்து எப்படியாவது மீனாவிற்கு விவாகரத்து வாங்கி தர வேண்டும் இப்படிப்பட்ட குணம் கொண்ட அவரிடம் எப்படி அவங்க எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்காங்க. இதெல்லாம் பாக்கவே ரொம்ப கொடுமையா இருக்கு என்று ஸ்ருதி கூறுகிறார். இப்படி சுருதி வீட்டிற்குள் நுழைந்ததும் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்படும் நிலையில் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

author avatar
Nanthini