சீரியலில் மட்டும் தான் ஹோம்லியா?.. மாடர்ன் டிரஸ்ஸில் ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் சிறகடிக்க ஆசை ரோகினி..!

By Nanthini on பங்குனி 24, 2025

Spread the love

விஜய் டிவியில் டிஆர்பி யில் முதல் இடத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் அதிகமாக பேசப்படும் நபராக ரோகிணி இருக்கிறார். ரோகிணியாக நடிக்கும் இவரின் நிஜ பெயர் சல்மா அருண். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான்.

   

தற்போது மாடலிங் மீதே விருப்பம் உள்ளதால் அதற்காக வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் இவர் ஒரு சில விளம்பர வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறி வருகிறார். இவர் தொடக்கத்திலேயே பெரிய பெரிய பிராட் கம்பெனி விளம்பரங்களில் தான் நடித்துள்ளார்.

   

 

அடுத்ததாக அரசாங்க விளம்பரத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சினிமாவில் சிவகார்த்திகேயன் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பல திரைப்படங்களில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவருக்கு நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியலில் தான் முதன் முதலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அந்த சீரியலில் செய்து காலம் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அடுத்ததாக ராஜா ராணி சீரியலிலும் நடித்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு சிறிய சிறிய கேரக்டராக இருந்தாலும் வாய்ப்பை விடாமல் பயன்படுத்திக் கொண்டு நடித்த இவர் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் வெளியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

பிறகுதான் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்தாலும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளார். இவர் எப்போது வீட்டில் மாட்டுவார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் ரோகிணியாக நடித்து வரும் அருண் சல்மாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவருக்கு ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில் ரோகிணியின் நிஜ கணவர் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.