தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள். எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு (SIR) தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் SIR பணிகளுக்குப் பிறகு 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இதனிடையே சென்னைக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் இருந்த 40,04,694 வாக்காளர்களின் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டு 25,79,676 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 வாக்காளர்களும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் 89,241 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இபிஎஸ் இன் எடப்பாடி தொகுதியில் 26,375 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் 42,119 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் (Instagram) திமுக மற்றும் அதன் தலைமைக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது…
தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை ஏற்கனவே அமலில்…
அதிமுகவில் தேர்தல் தோல்விக்குத் பிறகு வெடித்த உட்கட்சி மோதல், தற்போது சமாதானப் பேச்சுவார்த்தை மற்றும் மீண்டும் போர்க்கொடி தூக்கும் அதிரடி…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய திரைமறைவு அரசியல் நகர்வுகள், தற்போதைய அரசியல் சூழலில் மீண்டும் பெரும் புயலைக்…
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை…
மதுரையில் தமிழக வெற்றிக் கழக (தவிக) நிர்வாகி ஒருவர், பத்தாம் வகுப்பு படிக்கும் மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த…