பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைவது சரியாக இருக்கும் என்று தமிழக வெற்றிக்கழகம் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாநாடு போல் நடைபெற்றது. சிறப்பான முறையில் நிகழ்ச்சி நடைபெற்றதால் விஜயாபுரி அம்மன் கோவிலிலும் சத்தியமங்கலம் ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் மக்கள் வெள்ளத்தில் மிதந்தார். வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு செங்கோல் வழங்கினார், அதேபோல தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமைய தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்க்கு செங்கோல் வழங்கினேன். அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்த பிறகு தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைந்ததால் திமுகவின் B டீம் ஆக நீங்கள் செயல்படுகிறீர்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறுகின்றார். பாஜக மாநில தலைவர் நாகேந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்ட அதிமுகவில் இணைந்து கொள்வது சரியானதாக இருக்கும். அவர்தான் அதிமுகவின் B டீம் ஆக இருக்கின்றார் என்று செங்கோட்டையன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட முந்தைய பகை, இன்று ஒரு கொடூரமான…
திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சிக்கான சிகிச்சையின் போது நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவம், மருத்துவ வட்டாரத்திலும்…
தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…
தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…
அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…