தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிதாகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியும், தேர்தலுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையும் குறித்த சுவாரசியமான தரவுப்பகுப்பாய்வை ‘தி இந்து பிசினஸ்லைன்’ இதழ் வெளியிட்டுள்ளது. இத்தேர்தல் செயல்பாட்டின் போது சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இந்த வாக்காளர் நீக்க நடவடிக்கைக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஆய்வின் தரவுகளின்படி, குறைந்த அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாறாக, வாக்காளர்கள் நீக்கம் அதிக அளவில் நடைபெற்ற தொகுதிகளில் தவெகவின் வெற்றி வாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 10,000-க்கும் குறைவான வாக்காளர்கள் நீக்கப்பட்ட 19 தொகுதிகளில் திமுக 7 இடங்களையும், அதிமுக 6 இடங்களையும், தவெக 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
வாக்காளர் நீக்கத்தின் அளவு அதிகரிக்கும் போது தவெக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் சீராக உயர்ந்துள்ளது. 10,000 முதல் 20,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 80 தொகுதிகளில் தவெக 22 இடங்களிலும், 20,000 முதல் 30,000 வரை நீக்கப்பட்ட 66 தொகுதிகளில் 32 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, 30,000 முதல் 50,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 37 தொகுதிகளில் தவெக 24 இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகித்துள்ளது.
மேலும், மிக அதிக அளவாக 50,000 முதல் 80,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 22 தொகுதிகளில் 18 இடங்களை தவெக தன்வசப்படுத்தியுள்ளது. அதிலும் உச்சக்கட்டமாக, 80,000-க்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் தவெகவே முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 30,000 மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்ட 69 தொகுதிகளில் தவெக 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகவும், திமுகவுக்கு ஆதரவான வாக்காளர்களின் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டதே தங்களது பின்னடைவுக்கு முக்கியக் காரணம் என்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கும் தேர்தல் முடிவுகளுக்கும் இடையிலான இந்த நேரடித் தொடர்பு குறித்த விவாதங்கள் தற்போது தமிழக அரசியலில் முக்கியப் பொருளாக மாறியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ராஜாஜிபுரம் பகுதியில், பைக் ஓட்டிச் சென்ற சீருடை அணிந்த நபர் ஒருவர் மீது அங்குள்ள…
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவியாபாரி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திலுள்ள ராணி பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.…
விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் அரசியல் கட்சித் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பேச்சுக்கள்…
நடிகை த்ரிஷா, மூத்த நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். சாதாரணமாகப்…
இந்தியத் திரையுலகின் முன்னணி மூத்த நடிகரும், சமூக ஆர்வலருமான நானா படேக்கர் (75) கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென…
டெல்லி அசோகா ஹோட்டல் வளாகத்தில் உள்ள 'SOHO' கிளப்பிற்கு வெளியே, அக்டோபர் 4-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நாகாலாந்தைச்…