மாட்டு வண்டியில் தேடப்படும் குற்றவாளியுடன் பயணித்த முதலமைச்சர் ஜோசப் விஜய்யை ஏன் காவல்துறை கைது செய்யவில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது மட்டும் அவசர அவசரமாக வழக்குப்பதிவு செய்வது ஏன் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசு மற்றும் காவல்துறையின் ஒருபக்கச் சார்பான நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.
தாராபுரத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், மாட்டு வண்டியில் பயணம் செய்து வாக்கு சேகரித்த நிகழ்வைக் குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, அந்த வண்டியை ஓட்டிச் சென்ற அசோக் என்பவரை சுட்டிக்காட்டினார். தவெகவினரால் புகார் கொடுக்கப்பட்டு, காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருடன் முதலமைச்சர் விஜய் மேடையில் உலா வருவதையும், வண்டியில் பயணிப்பதையும் சாடிய அவர், “தேடப்படும் குற்றவாளியை முதலமைச்சரே நேரில் காப்பாற்றுகிறாரா?” என அடுக்கடுக்கான வினாக்களை தொடுத்தார்.
மேலும், தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே முதலமைச்சர் விஜய் ஒரே தொகுதிக்கு இரண்டு முறை சென்று வீதி வீதியாக விளம்பரம் தேடி வருகிறார் என்றும் அவர் விமர்சித்தார். பள்ளிக் குழந்தைகளைப் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்த அமைச்சர் கீர்த்தனா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பிய அவர், ஆளும் தரப்பினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது மட்டும் காவல்துறை முனைப்புடன் வழக்குப்பதிவு செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.
கடந்த நான்கு மாதங்களாக மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வரும் அரசு, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரைக்கூட நெருங்க முடியாது என்பதை உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். திமுக சட்டப் போராட்டங்களுக்கும் வழக்குகளுக்கும் என்றும் அஞ்சாது எனக் குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, திமுக தொண்டனையோ, கழகத் தலைமையையோ விஜய்யாலும் இந்த ஆட்சினாலும் எதுவும் செய்ய முடியாது என்று உறுதியளித்தார்.
தமிழக அரசியல் களத்தில் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆளும்கட்சியான தவெக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக…
சென்னையில் பேருந்தில் பயணித்த 73 வயது முதியவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 714 கிராம் தங்கக் கட்டியைத் திருடிய…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அருகில் உள்ள சாலை காலியாக இருந்தபோதிலும், நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தைப் பாதசாரிகள் நடமாடும்…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதிய வியூகங்களும் மாற்றங்களும்…
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மீனாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பயிற்சி வகுப்பிலிருந்து மிதிவண்டியில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை பைக்…
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா…