கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கணவருடன் வசித்து வந்த இளம்பெண் ஒருவர், இணையதளத்தில் வெளியான ஸ்பா (Spa) மேலாளர் பணிக்கான கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்துள்ளார். கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்ற அவருக்கு வேலையும் உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினமே மாலையில், அக்கும்பலைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரைத் தொடர்பு கொண்டு, ஊழியர்கள் சந்திப்பு இடப்பள்ளியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறுவதாகவும், புதிய ஊழியர்களுக்குச் சேலை வழங்கி வரவேற்பு அளிக்கப்படும் என்றும் கூறி அங்கு வரவழைத்துள்ளார்.
விடுதிக்குச் சென்ற அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்துள்ளனர். அந்த மதுவில் முன்கூட்டியே மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்ததால், அவர் சுயநினைவை இழந்தார். இதனைப் பயன்படுத்தி, அக்டோபர் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்கள் அவரை அறையிலேயே சிறைவைத்துத் தொடர்ச்சியாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இக்கொடூர செயல்களைத் தங்கள் செல்போன்களிலும் வீடியோவாகப் பதிவு செய்து அச்சுறுத்தியுள்ளனர்.
மயக்கம் தெளிந்த பின் நடந்த கொடூரத்தை உணர்ந்து பேரதிர்ச்சியடைந்த அப்பெண், பயத்தாலும் மன உளைச்சலாலும் உடனடியாகப் புகார் அளிக்கத் தயங்கியுள்ளார். பின்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது தோழி அளித்த தகவலின் அடிப்படையில் கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவப் பரிசோதனையில் அப்பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தற்போது கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து கொச்சி மாநகர காவல் ஆணையர் காளிராஜ் மகேஷ் குமார் தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. கொச்சியில் 4 இடங்களில் ஸ்பா மையங்களை நடத்தி வரும் ஸ்ரீராஜ் (30) மற்றும் அவரது கூட்டாளி ஜித்து (27) ஆகிய இருவரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இக்கும்பலுக்குப் பாலியல் மாஃபியாக்கள் மற்றும் ஆள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதுடன், தலைமறைவாக உள்ள மேலும் இருவரைப் பிடிக்கக் காவல் துறையினர் வலைவீசியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் தனது சிறுமி மகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பெண், நடுவழியில் எதிர்பாராத…
குன்றத்தூரில் தனது குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அபிராமியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் உள்ள பியாவ்ரா காட்டுப்பகுதியில், 17 வயது இளம்பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு தலை…
டெல்லி புடாரி பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் விசித்திரமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (SIR) எதிராகப் பிரபல யூடியூபர் துருவ் ரதி மற்றும் நடிகர் பிரகாஷ்…
ஃபிரோசாபாத்தின் டி.ஏ.வி மார்க்கெட் பகுதியில், திருமண முறிவு வழக்கு நிலுவையில் இருந்த சூழலில் தனித்து வாழ்ந்து வந்த தம்பதியிடையே ஏற்பட்ட…