தோண்ட தோண்ட பூதம்…. தூக்கத்தை தொலைத்த ஜெம் வீரமணி…. சிக்கியது 8 போன்கள், 55 ரகசிய ஆவணங்கள்…. ஓட்டுநர்கள் கக்கிய பகீர் உண்மை…!

Spread the love

ஜெம் கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்புப் பிரிவில் பெறப்பட்ட பென்டிரைவ் (Pendrive) வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, பல்வேறு சிறுமிகள் அவர் மீது புகார்களை அளித்து வரும் நிலையில், இவ்வழக்கை முழுமையாக விசாரிக்க தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக வீரமணியுடன் சேர்த்து, சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் வீடியோ ஆதாரத்தை மறைத்த குற்றத்திற்காக கணேசன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வீரமணி மீது இதுவரை நான்கு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்மூலம் அவர் மீதான மொத்த வழக்கின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கின் தொடர் விசாரணையில் வீரமணிக்குச் சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் துன்புறுத்தல்களுக்குத் துணைபோன அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து, வீரமணியிடம் சுமார் 23 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணியாற்றிய லாசர், 8 ஆண்டுகளாகப் பணியாற்றிய பாபு மற்றும் பார்த்திபன் ஆகிய மூன்று கார் ஓட்டுநர்களையும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 8 செல்போன்கள் மற்றும் 55 முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Nanthini

Recent Posts

திமுகவுக்கு பேரதிர்ச்சி… ஸ்டாலினுக்கு செக் வைத்த செந்தில் பாலாஜி?…. தாராபுரத்தில் நடக்கும் அந்த ‘ரகசிய’ அரசியல் ஆபரேஷன்….!

தமிழக அரசியல் களத்தில் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆளும்கட்சியான தவெக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக…

6 minutes ago

“விழுவது போல நடித்து…” 73 வயது முதியவரை  திசைதிருப்பிய பெண்… ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டி அபேஸ்… அதிர வைக்கும் வீடியோ வைரல்..!!

சென்னையில் பேருந்தில் பயணித்த 73 வயது முதியவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 714 கிராம் தங்கக் கட்டியைத் திருடிய…

7 minutes ago

“ரோடு காலியா இருக்கு…. ஆனா…” செடிகளுக்கு இடையே புகுந்து சென்ற பைக் ஓட்டி…! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அருகில் உள்ள சாலை காலியாக இருந்தபோதிலும், நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தைப் பாதசாரிகள் நடமாடும்…

14 minutes ago

விஜய் எடுத்த அதிரடி முடிவு…. செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவியா?…. கூட்டணிக்குள் பெரும் புயல்…. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதிய வியூகங்களும் மாற்றங்களும்…

17 minutes ago

“என்னை காப்பாத்துங்க…” அலறி சத்தம் போட்ட சிறுமி…! வழிமறித்து அத்துமீறிய வாலிபர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மீனாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பயிற்சி வகுப்பிலிருந்து மிதிவண்டியில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை பைக்…

22 minutes ago

காலடியில் உருண்டோடிய தொப்பி… உடனடியாக முதல்வர் விஜய் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…. தீயாய் பரவும் வீடியோ….!

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா…

24 minutes ago