பண நெருக்கடி இல்லாமல் வாழ இந்த ஆலோசனை உங்களுக்கு மிகவும் உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி திட்டத்தில் பணத்தை முதலீடு செய்ய பலரும் விரும்புகின்றனர். இந்த திட்டம் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்தால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிதியை குவிக்க முடியும். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 12 சதவீதம் வருமானம் கிடைக்கும். இது ஒரு சந்தை இணைக்கப்பட்ட திட்டம். எனவே சந்தைக்கு ஏற்ப வருமானமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.
ஒரு மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி திட்டத்தில் நீண்ட காலத்திற்கு மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்தால் ஒரு கோடி ரூபாய் வரை நிதியை குவிக்க முடியும். அதற்கு மேலும் தொடர்ந்து 27 ஆண்டுகளுக்கு மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்தால் மொத்தம் 16.20 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு 12 சதவீத வருமானத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு 1,08,11,565 ரூபாய் மொத்த நிதியாக கிடைக்கும். இதில் உங்களுக்கு கிடைக்கும் மொத்த லாபம் 91, 91, 565 ரூபாயாக இருக்கும்.
தொடர்ந்து 20 ஆண்டுகள் எஸ்ஐபி திட்டத்தில் மாதம் 10000 ரூபாய் முதலீடு செய்தால் மொத்தம் 24 லட்சம் ரூபாய் எஸ்ஐபியில் முதலீடு செய்வீர்கள். இதற்கு 12 சதவீத வருமானம் கிடைத்தால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 99.96 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதில் உங்களுக்கு 75.96 லட்சம் ரூபாய் லாபமாக கிடைக்கும். இதில் கிடைக்கும் லாபம் சந்தை ஏற்ற இறக்கங்களை பொறுத்தது. இதில் முதலீடு செய்வதற்கு முன் சந்தை ஆலோசர்களிடம் ஆலோசனை பெறுவதும் நல்லது.
