தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகராக திகழ்பவர் வேல்முருகன். இவர் விருதாச்சலம் பகுதியை சேர்ந்தவர். இவர் பின்னணி பாடகர் மட்டுமில்லாமல் நடிகர், பாடலாசிரியர் பின்னணி பன்முகம் கொண்டவர். ஆரம்பத்தில் இவர் நாட்டுப்புற பாடகராகத் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமானார். அதற்குப் பிறகு தான் இவர் சினிமாவில் களம் இறங்கினார்.
இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் ‘மதுர குலுங்க’ என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஜேம்ஸ் வசந்தனால் தான் இவருடைய திரை பயணத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது என்று சொல்லலாம். அதனைத் தொடர்ந்து இவர் நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா, ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால, கழுகு படத்தில் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.
இவர் ஜி வி பிரகாஷ் இசையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த அசுரன் படத்தில் கத்தரி பூவழகி என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடலுக்காக இவர் பல விருதுகளை வாங்கி இருந்தார். தற்போதும் இவர் பல படங்களில் கமிட்டாகி பாடிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் 2020 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக வேல் முருகன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனார். அதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை 2 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தன் மனைவியுடன் பங்குபெற்று இருந்தார். வேல்முருகன் தன்னுடன் படித்த கலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
தற்பொழுது பாடகர் வேல்முருகன் தன்னுடைய காதல் மனைவியின் பிறந்தநாளுக்கு ஒரு காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது இவர் ஒரு கூடை நிறைய தக்காளியை வாங்கி வந்து அதனை தன் மனைவியின் பிறந்தநாளுக்கு பரிசாக வழங்கி இருக்கிறார். தற்பொழுது வேல்முருகன் வழங்கிய இந்த பரிசை இணையத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய்யின் அரசு 100 நாட்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு நாளிதழ்களில்…
உங்கள் நண்பர் ஹர்ஷ் கடந்து வந்த பாதை மிகவும் மனவேதனை அளிக்கக்கூடியது; விவாகரத்தின் வலியால் துவண்டுபோன ஒரு பெண்ணுக்கு அரணாக…
தமிழக சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது. சட்டப்பேரவை நிகழ்வின் போது, இந்தத்…
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடையும் இவ்வேளையில், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்துக்…
ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பிஸ்மில்லா காலனியில் தங்கி பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது…
சஹாரன்பூரில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 15 வயது சிறுமியான தீக்ஷா சர்மா பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளார். ஜைத் என்பவர்…