தெருக்குரல் அறிவு ஒரு ராப் பாடகர்ஆவார். இவர் அனிருத் இசையமைப்பில் மாஸ்டர் படத்திற்காக எழுதிய “வாத்தி ரெய்டு” பாடல் மற்றும் பாடகி “தீ” யுடன் இவர் இணைந்து பாடிய ஆல்பம் பாடலான என்ஜாயி என்ஜாமி ஆகிய இந்த பாடல்களின் மூலம் பிரபலமானவர். சென்னை அரக்கோணம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் தொலைக்காட்சி வானொலி போன்றவை இல்லாமல் அவர் பெற்றோர் இவரை வளர்த்தனர்.
அதனால் இவர் நாட்டுப்புற பாடல்களின் தாக்கத்திற்கு உட்பட்டார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே சாதி, வறுமை பற்றிய கவிதைகள் எழுத தொடங்கினார் அறிவு. கல்லூரி காலத்தில் இவருக்கு அதன் பற்று அதிகமானது. இப்படி பிரபலமான இவர் திடீரென்று நேற்று சத்தமில்லாமல் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட தெருக்குரல் அறிவு திருமாவளவன் முன்னிலையில் திருமணம் முடிந்த கையோடு முதன்முதலாக அம்பேத்காரின் ஜெய் பீம் என்ற ராப் பாடலை பாடினார். அவருடன் இணைந்து திருமாவளவனும் பாடினார். அவரிடம் ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டார்.
சிறுவயதில் இருந்தே ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது . சாதி ஏற்றத்தாழ்வுகளை தாண்டி சுதந்திர காற்றே சுவாசி என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கும். அப்படி சுதந்திரமான ஒரு முடிவாக என்னுடைய திருமணத்தை பார்க்கிறேன். சுயமரியாதை திருமணம் தான் பண்ண வேண்டும். என்று நினைத்தேன். பெரியார் இயக்கத்தில் அவருடைய சட்டத்தின் வழியாக அவர் பெற்றுக் கொடுத்த உரிமைகளின் மூலமாக கல்வி கற்று அடையாளங்களை பெற்று இன்று சுயமரியாதையோடு மனிதர்களாக மாறியிருக்கும் நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காக நான் அம்பேத்கர் மண்டபத்திற்கு வந்தேன்.
இசைஞானி இளையராஜா அவர்கள் திருமணம் செய்து வைத்தார். உண்மையிலேயே இசையினுடைய இறைவன் அவருடைய கரங்களினால் திருமணம் செய்து கொண்டது சந்தோஷமாக இருக்கிறது. இந்த பாகுபாடெல்லாம் தாண்டி இசையால் தான் தேடலாக இருந்தது இன்று அது ஒரு திருமணமாக முடிந்தது. இந்த திருமணத்திற்கு உதவியாக இருந்த என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் எல்லோருக்கும் திருமணம் செய்து வைத்த இளையராஜா அவர்களுக்கும் நன்றி.